மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையின் வளாகத்தில் நடிகர் சூரி தனியார் உணவகத்தை கட்டியுள்ளார். இந்த உணவகத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூரி, மேயர் இந்திராணி, டீன் ரத்தினவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் சூரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் விடுதலை படம் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது என்றும், இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளார் என்றும் கூறினார். […]
