விவசாய நிலத்திற்குள் காட்டு யானைகள் நுழைந்து தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உடையார்கோணம் பகுதியில் விவசாய நிலங்களுக்குள் கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டு யானைகள் கூட்டமாக புகுந்து தென்னை, வாழை போன்றவற்றை சேதப்படுத்தி வந்துள்ளது. இதனால் வனத்துறை வீரர்கள் அப்பகுதியில் இருக்கக்கூடிய கிராம மக்களின் உதவியுடன் காட்டு யானைகளை விரட்டி அடித்துள்ளனர். மேலும் அந்தப் பகுதியில் காட்டு யானைகள் வராமல் தடுப்பதற்காக அகழிகள் தோண்டப்பட்டபோதும் ஆனைக்கல் பகுதியில் உள்ள செல்வன் தென்னந்தோப்புக்குள் […]
