திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை அருகில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் குருமலை, மாவடப்பு, ஈசல்திட்டு, குழிப்பட்டி, கோடந்தூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வன குடியிருப்புகள் அமைந்துள்ளது. இங்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அங்கு வனசிறு மகசூல் சேகரம் மற்றும் சிறிய பரப்பளவில் விவசாயப் பணிகளை செய்து வருகின்றனர். அதன்படி மலைப்பகுதிகளில் தட்டை, அவரை, பீன்ஸ், வரிமொச்சை, கேழ்வரகு, சாமை, தினை உள்ளிட்ட பயறுவகைகளை […]
