தேனி மாவட்டத்தில் உடல் நல குறைவால் அவதிப்பட்ட முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் அடுத்துள்ள சின்னராமகவுண்டன்பட்டியில் பெருமாள்(76) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 2 மாதத்திற்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு சென்ற பின்பும் அடிக்கடி உடல் நலம் பாதிப்படைந்ததால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பெருமாள் மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். […]
