உடல் கருகி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி அருகில் ஆனந்தபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆதிலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனது வீட்டில் கொசு அதிகமாக கடிப்பதால் கொசுவர்த்தி ஏற்றி வைத்துள்ளார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக ஆதிலட்சுமியின் சேலை கொசுவர்த்தியின் மேல் விழுந்தது. இதனையடுத்து சேலையில் தீப்பிடித்து உடல் முழுவதும் பரவியுள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் ஆதிலட்சுமி கூச்சலிட்டுள்ளார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் […]
