உடற்பயிற்சி கூடங்களில் முக கவசம் அணிவது மருத்துவரீதியாக ஆபத்து என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்திலும், ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதில் பல செயல்களுக்கு தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் உடற்பயிற்சி கூடங்கள் வருகின்ற 10ம் தேதி முதல் செயல்பட தமிழக முதல்வர் உத்தரவிட்டிருருந்தார். […]
