பெரியவர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ள போது, குழந்தைகள் மட்டும் பள்ளிகளுக்கு வர கட்டாயப் படுத்தப்படுவதா என டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லியில் காற்று மாசு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காற்று மாசை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும் டெல்லியில் பள்ளிகளை மீண்டும் திறந்த கெஜ்ரிவால் அரசின் முடிவுக்கு உச்சநீதிமன்றம் கடும் […]
