ஆந்திரபிரதேசத்தில் எம்பிபிஎஸ் படிப்புக்கான கட்டணத் தொகையை வருடத்திற்கு ரூபாய்.24 லட்சம் என அரசு நிர்ணயித்தது. அந்த வகையில் கடந்த 2017 ஆம் வருடம் செப்டம்பர் 16-ம் தேதி ஆந்திரபிரதேச அரசு வெளியிட்ட அரசாணையில் 2017-2020-ம் வருடத்துக்கான படிப்பு கட்டணத்தொகையை ஆண்டுக்கு ரூபாய்.24 லட்சம் என உயர்த்தி அறிவிக்கப்படுகிறது என தெரிவித்தது. இருப்பினும் அரசின் இந்த உத்தரவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆந்திரபிரதேச அரசு சார்பாக மேல் முறையீடு செய்யப்பட்டது. […]
