Categories
உலக செய்திகள்

பாதுகாப்பான குடிநீர் இல்லை…. மரியுபோல் நகரில் காலரா ஏற்படக்கூடிய அபாயம்…!!!

உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரத்தில் சுகாதாரமான குடிநீர் இல்லாததால் மக்களுக்கு காலரா பரவக்கூடிய அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில், ரஷ்யா 100 நாட்களை கடந்து தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டின் மரியுபோல் என்னும் துறைமுக நகரம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அங்கு சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். அந்த மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைப்பதில்லை. எனவே, அங்கு காலரா நோய் பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து இங்கிலாந்து நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது, ரஷ்யப் […]

Categories
உலக செய்திகள்

உணவு, விவசாய இலக்குகளை அழித்த ரஷ்யா…. உக்ரைன் அதிகாரிகள் வெளியிட்ட தகவல்…!!!

உக்ரேன் நாட்டில் இருக்கும் உணவு விவசாய இலக்குகளை ரஷ்யா அழித்துக் கொண்டிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். உலக நாடுகளை அச்சுறுத்தும் விதமாக உக்ரைன் நாட்டில் இருக்கும் உணவு மற்றும் விவசாய இலக்குகளை ரஷ்யா அழித்துக் கொண்டிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டின் நெறிப்படி மீண்டும் கருங்கடலை திறக்கக்கூடிய ஒப்பந்தங்களை செய்ய இவ்வாறு செய்து கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. உக்ரைன் அதிகாரிகள், தங்கள் நாட்டின் விவசாய பொருட்களுக்கான முனையங்கள் ரஷ்யப் படைகள் தாக்கி அழித்ததாக கூறியிருக்கிறார்கள். உலக அளவில் உணவு […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய நாட்டின் கல்லூரிகளுக்கு தடை…. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு…!!!

உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கி ரஷ்ய நாட்டின் 236 கல்லூரிகள், பல்கலைகழகங்கள், 261 கல்லூரி தலைவர்கள் மீது தடை விதிக்கப்படுகிறது என்று அறிவித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது 107 வது நாளாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதில் இரண்டு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான மக்களும் ராணுவ வீரர்களும் மரணமடைந்துள்ளனர். மேலும், பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய நாட்டின் 236 கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் 261 கல்லூரி தலைவர்கள் மீது தடை அறிவிக்கப்படுவதாக கூறியிருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா… கடுமையாக கண்டிக்கும் ரஷ்யா…!!!

உக்ரைனுக்கு ராணுவ உதவி அளித்ததற்காக அமெரிக்க நாட்டை ரஷ்யா கடுமையாக சாடியுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது 100 நாட்களை கடந்து தீவிரமாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைன் நாட்டிற்கு ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. இதற்கிடையில் வியன்னாவில் நடந்த ராணுவ பாதுகாப்பு மற்றும் ஆயுத கட்டுப்பாடு தொடர்பிலான பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட ரஷ்ய தரப்பு  தெரிவித்ததாவது, மேற்கத்திய நாடுகள் உக்ரைன் நாட்டிற்கு அளிக்கும் ஆயுதங்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இது மட்டுமல்லாமல் […]

Categories
உலகசெய்திகள்

ரஷ்யாவின் தொடர் தாக்குதல்…. உக்ரைனுக்கு ராக்கெட் லாஞ்சர்கள் வழங்க…. பிரபல நாடு முடிவு….!!!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ளும் விதமாக உக்ரைனுக்கு  ராக்கெட் லாஞ்சர்கள் வழங்க பிரிட்டன் முடிவு செய்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகின்றது. இந்த நிலையில் எம்270 ரக ராக்கெட் லாஞ்சர்கள் உக்ரைனுக்கு  வழங்க பிரிட்டன்  முடிவு செய்திருக்கிறது. மேலும் 80 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாக  இந்த ராக்கெட் லாஞ்சர்கள்  விளங்குகிறது. ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள தளவாடங்களை நண்பர்களுக்கு மிகவும் உதவியாக […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டின் ஏற்றுமதியை நாங்கள் தடுக்கவில்லை…. விளாடிமிர் புடின் பேச்சு…!!!

உக்ரைன் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தானிய பொருட்களை நாங்கள் ஒருபோதும் தடுக்கவில்லை என்று விளாடிமிர் புடின் கூறியிருக்கிறார். ரஷ்ய நாட்டின் ஒரு தொலைக்காட்சியில் விளாடிமிர் புடின் ஒரு நேர்காணலில் தெரிவித்ததாவது, உக்ரைன் நாட்டில் நடக்கும் தானிய ஏற்றுமதியில் நாங்கள் எப்போதும் தலையிட்டதில்லை. அந்நாட்டில் தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கு பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. உக்ரைன் நாட்டின் கட்டுப்பாட்டில் இயங்கும் துறைமுகங்களின் வழியாக ஏற்றுமதி செய்யலாம். அந்நாட்டின் துறைமுகங்களில் இருக்கும் கண்ணிவெடியை நீக்கும் சமயத்தில் ரஷ்யா தாக்குதல் மேற்கொள்ளாது. இதனை […]

Categories
உலக செய்திகள்

“சரியான நேரத்திற்காக காத்திருக்கிறேன்”…. உக்ரைனுக்கு செல்ல இருக்கும் போப் பிரான்சிஸ்…. உலக தலைவர்களிடம் மீண்டும் கோரிக்கை….!!

உக்ரைன் நாட்டிற்கு செல்ல விரும்புவதாகவும், சரியான நேரத்திற்காக காத்திருப்பதாகவும் போப் பிரான்சிஸ் கூறியுள்ளார். உக்ரைன் ரஷிய இடையிலான போர் 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரினால் இரு தரப்பிலும் அதிக அளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் உக்ரைனிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த போரை நிறுத்துவதற்காக சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளது. குறிப்பாக வாடிகன் தேவாலயத்தின் போப் பிரான்சிஸ், போரை முடிவுக்கு கொண்டு வர, […]

Categories
உலக செய்திகள்

அதிநவீன ஏவுகணைகளை…. உக்ரைனுக்கு வழங்க வேண்டும்…. வேண்டுகோள் விடுத்த உக்ரைன் அதிபர்….!!

நீண்ட தூரம் சென்று  அழிக்கும் அதிநவீன ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிட வேண்டுமென  உக்ரேன் அதிபர் கோரிக்கை வைத்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 100வது நாட்களை முடிந்துவிட்ட நிலையிலும், இந்த போர் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில், உக்ரைனிய நகரங்களின் கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ராணுவ கட்டமைப்புகள் ரஷியாவின் தாக்குதலினால் சின்னாபின்னமாகியுள்ளது. உக்ரைனில் தலைநகரை பிடிக்க முடியாத சூழ்நிலையில் அந்நாட்டின் கிழக்கு  பகுதியிலுள்ள  டான்பாஸ் நகரத்தை   முற்றிலுமாக கைப்பற்றுவதில் ரஷிய இராணுவ படைகள் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்…. கூடுதல் ஆயுத உதவிகள்…. ஸ்வீடன் அரசின் அறிவிப்பு….!!

உக்ரைனுக்கு 5 ஆயிரம் டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் நிதி உதவிகள்  வழங்கப்பட உள்ளதாக ஸ்வீடன் அரசு தெரிவித்துள்ளது.  உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 100வது நாட்களாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. ரஷ்ய உக்ரைனில் பல முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளது. மேலும் ரஷ்யப் படைகள் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இவ்வாறு மாதக்கணக்கில் நீடிக்கும் ரஷிய- உக்ரைன் போர் சர்வதேச அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உக்ரைனுக்கு கூடுதல் ஆயுத உதவிகள் தேவை என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய நாட்டை நாங்கள் எப்போதும் தாக்க மாட்டோம்…. அமெரிக்க நாட்டிடம் ஏவுகணை கோரும் உக்ரைன்…!!!

உக்ரைன் அரசு அதிக தொலைவிற்கு பாய்ந்து தாக்க கூடிய ஏவுகணைகளை அமெரிக்காவிடம் கோரியுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது 100 நாட்களை கடந்து தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில், ரஷ்ய படையினருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிக தொலைவிற்கு சென்று துல்லியமாக தாக்கக்கூடிய ஏவுகணைகளை தங்களுக்கு தந்து உதவ வேண்டும் என்று அமெரிக்காவிடம் உக்ரைன் தூதரான ஒக்ஸானா மார்க்கரோவா கோரிக்கை விடுத்திருக்கிறார். மேலும் அவர் தெரிவித்ததாவது, எங்கள் நாட்டை காப்பதற்கு இது போன்ற ஆயுதங்கள் தேவைப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

ஐரோப்பிய நாடுகளின் பிரச்சனை, உலக பிரச்சனை இல்லை… அந்த மனநிலையில் இருக்காதீர்கள்… -ஜெய்ஷங்கர்…!!!

மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர் ஐரோப்பிய நாடுகளுக்கான பிரச்சனையை உலக பிரச்சனைகளாக நினைக்கும் மனநிலையை விட்டு வெளியேறுங்கள் என்று கூறியிருக்கிறார். ஸ்லோவேகியா என்னும் ஐரோப்பிய நாட்டின் தலைநகரான பிரஸ்லாவாவில், நேற்று ஒரு நிகழ்ச்சி நடந்திருக்கிறது. இதில் கலந்து கொண்ட மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கரிடம், உக்ரைன்-ரஷ்ய போரில் இந்தியா யார் பக்கம்? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் தெரிவித்ததாவது, இந்தியா மீது இவ்வாறான கட்டமைப்பை திணிப்பதற்கு முயற்சி நடக்கிறது. இந்தியா, யார் பக்கமும் சாய தேவையில்லை என்று […]

Categories
உலக செய்திகள்

20 சதவீத பகுதியை இழந்துள்ளோம்…. அதிரடியில் ரஷ்யப் படைகள்…. வேதனையில் உக்ரைன் அதிபர்….!!

உக்ரைன் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை ரஷிய தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக உக்ரைன் அதிபர் இன்று தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 100வது நாட்களாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இங்கு ரஷியாவை ஒட்டியிருக்கும் கிழக்கு உக்ரைன் பகுதிகளில் போர் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், ஐரோப்பிய நாட்டின் லக்சம்பர்க்கில் நடைபெற்ற சட்ட உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தில் காணொலி வாயிலாக கலந்துகொண்டு உக்ரைன் அதிபர்  ஜெலென்ஸ்கி பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “உக்ரைனின் 20 சதவீத நிலபரப்பை ரஷியவின் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யப்படைகளின் கொடூரம்…. உக்ரைனில் சேதப்படுத்தப்பட்ட 1000 பள்ளிகள்….!!!

உக்ரேன் நாட்டில் இருக்கும் ஆயிரத்திற்கும் அதிகமான பள்ளிகள் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய படைகள் உக்ரேன் நாட்டின் மீது மூன்று மாதங்களை கடந்து தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இதில் உக்ரைன் நாட்டில் இருக்கும் மருத்துவமனைகள், வீடுகள், பள்ளிக்கூடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மக்களின் குடியிருப்புகளை சேதப்படுத்தும் நோக்கத்தோடு தாக்குதல் மேற்கொள்வது போர்குற்றம். எனினும், கட்டிடங்களை காட்டிலும் பள்ளிக்கூடங்கள் நூற்றுக்கணக்கில் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன என்று நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். செர்னிஹிவ் என்னும் நகரத்தில் இருக்கும் 35 பள்ளிகளில் 7 […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிடம் சில பகுதிகளை கொடுத்தாலும்…. போர் முடிவடையாது… -ஒலேனா ஜெலென்ஸ்கா…!!!

உக்ரைன் அதிபரின் மனைவியான ஒலேனா ஜெலென்ஸ்கா, தங்கள் நாட்டினுடைய சில பகுதிகளை ரஷ்யாவிற்கு கொடுத்தாலும் போர் நிறைவடையாது என்று தெரிவித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவியான ஒலேனா ஜெலென்ஸ்கா தெரிவித்ததாவது, சில நேரங்களில் செல்வாக்கு மிகுந்த நாடுகளை சேர்ந்த தலைவர்கள்  வெளியிடும் அறிக்கைகள் அனைத்தையும் உக்ரைன் மக்கள் எளிதாக எடுத்து விட முடியாது. எங்கள் நாட்டின் சில பகுதிகளை அவர்களிடம் ஒப்படைக்க முடியாது. அது சுதந்திரத்தை விட்டுக் தருவது போல ஆகிவிடும். ரஷ்யப்படையினர், டான்பாஸ் பகுதியில் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போரால் குறைந்த இந்திய பொருளாதார வளர்ச்சி… வெளியான புள்ளி விபரம்…!!!

உக்ரைனில் நடக்கும் ரஷ்ய போரால் இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது, 4.1% குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் மற்றும் ரஷ்யா நாட்டிற்கு இடையே கடுமையான போர் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் இந்திய நாட்டின் பொருளாதாரமானது நான்காம் காலாண்டில் குறைவான வளர்ச்சியை கண்டிருக்கிறது. ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் இந்திய நாட்டின் உள்நாட்டு உற்பத்தியானது 4.1% தான் வளர்ச்சியடைந்திருக்கிறது. பொருளாதாரம் மீண்டு வருவதற்கு பணவீக்கம் மிகப்பெரும் தடையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரையிலான […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்காக போரிட்டரா…. ஹீரோவாக போற்றப்படும்…. பிரிட்டன் எம்.பி-யின் மகன்….!!

பிரிட்டன் எம்.பி.யின் மகன் உக்ரைனின் பக்கம் போரிட்டதற்காக பிரிட்டிஷ் ஊடகங்களில் ஹீரோவாகப் போற்றப்படுகிறார்.  உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உக்ரைனில் ரஷிய இராணுவத்திற்கு எதிராக போரிட்டதற்காக பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மந்திரி ஹெலன் கிராண்டின் மகனான பென் கிராண்ட் மீது கிரிமினல் வழக்கைத் தொடங்கியுள்ளதாக ரஷிய நீதித்துறை தெரிவித்துள்ளது. இங்கு கூலிப்படை மீதான குற்றவியல் வழக்கின் கட்டமைப்பிற்குள், பிரிட்டனை சேர்ந்த பென் கிராண்ட் உக்ரைனுக்காக ஆற்றிய பங்கை ரஷிய விசாரணையாளர்கள் […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் உக்ரைனுக்கு ராக்கெட் விற்க மாட்டோம்…. ஜோ பைடன் மறுப்பு…!!!

ரஷ்ய நாடு வரை பாய்ந்து தாக்கக்கூடிய திறனுடைய ராக்கெட்டுகளை உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா விற்பனை செய்யாது என்று ஜனாதிபதி ஜோ பைடன் கூறியிருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது மூன்று மாதங்களைத் தாண்டி தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் தலைநகரை ரஷ்யாவால் கைப்பற்ற முடியவில்லை. தற்போது, அந்நாட்டின் கிழக்குப் பகுதிகளை கைப்பற்ற தீவிரமாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், ரஷ்யாவை எதிர்த்து நடக்கும் போரில் அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவித்து […]

Categories
உலக செய்திகள்

கிழக்கு உக்ரைனை ஆக்கிரமிக்க ரஷ்யா தீவிரம்… லுஹான்ஸ்க் மாகாணத்தில் கடும் தாக்குதல்…!!!

உக்ரைன் கிழக்குப் பகுதியை ஆக்ரமிப்பதற்காக லுஹான்ஸ்க் என்னும் பிராந்தியத்தில் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது. ரஷ்யா உக்ரேன் நாட்டின் மீது மூன்று மாதங்களை தாண்டி கடுமையாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. எனினும் அந்நாட்டின் தலைநகரான கீவ் மற்றும் கார்கீவ் நகரங்களை கைப்பற்ற முடியவில்லை. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதிகளை ஆக்கிரமிக்க ரஷ்ய வீரர்கள் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் தேவைப்படும் பட்சத்தில் மேலும் அதிக வீரர்களை இணைக்க ரஷ்ய […]

Categories
உலக செய்திகள்

போரில் காயமடைந்த ரஷ்ய வீரர்கள்…. நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அதிபர் புடின்…!!!

உக்ரைனில் நடக்கும் போரில் காயமடைந்த ரஷ்ய வீரர்களை அதிபர் விளாடிமிர் புடின் நேரில் சந்தித்திருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டில் தொடர்ந்து போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இதற்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இதில், காயமடைந்த ரஷ்ய வீரர்கள் மாஸ்கோ நகரில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிபர் விளாடிமிர் புடின் அந்த மருத்துவமனைக்கு சென்று, காயமடைந்த வீரர்களுக்கு ஆறுதல் கூறியிருக்கிறார். மேலும் நாட்டிற்காக செய்த சேவைக்கு நன்றி கூறியிருக்கிறார்.

Categories
உலக செய்திகள்

“தடைகளை விளக்கினால் மட்டுமே இது சாத்தியம்”…. உக்ரேனிலிருந்து உணவுப் பொருள்கள் ஏற்றுமதிக்கு…. ரஷ்ய வைத்த அதிரடி செக்….!!

ரஷிய மீதான தடைகளை விலக்கினால் மட்டுமே உக்ரைனிலிருந்து உணவு பொருள்களை ஏற்றி செல்லும் கப்பல்களுக்கு மனிதாபிமான வழித்தடங்களை உருவாக்க தயாராக இருப்பதாக ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.  நேட்டோ என்னும் பாதுகாப்பு அமைப்பில்  சேர விரும்பிய உக்ரைனுக்கு எதிராக ரஷிய கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதியிலிருந்து போரை தொடங்கியுள்ளது. குறிப்பாக கிழக்கு உக்ரைன் மீதான தாக்குதலை ரஷிய தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் டொனெட்ஸ்க் பகுதியில் சுவிட்லோடர்ஸ்க் என்ற நகரத்தை ரஷிய படைகள் நேற்று […]

Categories
உலக செய்திகள்

போர் குற்றவாளிக்கு…. வாழ்நாள் சிறை தண்டனை…. உக்ரைன் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு….!!

ரஷியா உக்ரைன் இடையேயான போரின், முதலாவது போர்க்குற்ற விசாரணையில் தீர்ப்பு வழங்கப்பட்டது.  ரஷியா உக்ரைன் இடையேயான போரின் காரணமாக முதலாவது போர்க்குற்ற விசாரணையில் தீர்ப்பு இன்று  வழங்கப்பட்டுள்ளது. உக்ரைனின் தலைநகரான கீவ்வில் உள்ள நீதிபதிகள் குழு, போர்க்குற்றவாளி விசாரணையில் நேற்று தீர்ப்பு வழங்கியது. 21 வயதுடைய ரஷ்ய ராணுவ வீரரான ஒருவர் உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பின் ஆரம்ப கட்டத்தில், நிராயுதபாணியான உக்ரைன் நாட்டை சேர்ந்த 62 வயது மூதாட்டியை கொன்றதற்காக கைதுசய்யப்பட்டுள்ளனர்.  உக்ரைனின் வடகிழக்கு சுமி […]

Categories
உலகசெய்திகள்

லைவ் அப்டேட்ஸ்…. அதிபரை கொல்ல முயற்சி…. உக்ரைன் அதிகாரி திடுக்கிடும் தகவல்…!!!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கியது. சுமார் மூன்று மாதங்களாக இந்த போர் நீடித்து வருகின்றது. இந்த நிலையில் உக்ரைன் போர் பற்றிய அண்மை செய்திகளைக் காண்போம். உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான மரியுபோலை ரஷ்யா முழுமையாக கைப்பற்றியுள்ளது. மூன்று மாத கால போரில் இந்த நகரத்தின் கட்டிடங்கள் ரஷ்யப் படைகளின் தாக்குதலில் எலும்புக்கூடாக காட்சி அளித்து வருகிறது. மேலும் இந்த நகரத்தின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஈடுபாடுகளில் சிக்கிய 200 […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா அவர்களுக்கு போதாதா…? என் வீட்டை எதற்கு அழித்தார்கள்?…. வேதனையுடன் கேட்கும் உக்ரைன் மூதாட்டி…!!!

உக்ரைன் நாட்டை சேர்ந்த 82 வயது மூதாட்டியின் குடியிருப்பு ரஷ்யா நடத்திய தாக்குதலில் அழிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 4-ஆவது மாதமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. மேலும், ரஷ்யா வான்வெளி தாக்குதல் நடத்தியதில் உக்ரைன் நாட்டின் பல குடியிருப்புகள் அழிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அங்கு வசித்து வரும் மரியா மாயாஷ்லபக் என்ற 82 வயதுடைய மூதாட்டியின் குடியிருப்பு வெடிகுண்டு தாக்குதலில் தகர்க்கப்பட்டது. ரஷ்ய படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல், தன் வீட்டின் சமையலறையை தாக்கியதாக வருத்தத்துடன் […]

Categories
உலக செய்திகள்

பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை… எப்போது முடியும் போர்…? -உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி…!!!

ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் குறித்த பேச்சுவார்த்தையில் தடை ஏற்பட்டிருப்பதாக ஜெலன்ஸ்கி தெரிவித்திருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் ஜனாதிபதி ஒரு தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில் தெரிவித்தாவது,  உக்ரைன் நாடு ரத்தக்களறியாக இருக்கிறது. அங்கு தொடர்ந்து தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் குறித்த பேச்சுவார்த்தையில் தற்போது தடை ஏற்பட்டிருக்கிறது. எனினும் பேச்சுவார்த்தை மூலமாக போரை நிறுத்த முடியும். இந்தப் போரில் உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

கேன்ஸ் திரைப்படவிழாவில் பரபரப்பு…. உக்ரைனுக்கு ஆதரவாக… அரைகுறை ஆடையுடன் வந்தப் பெண்…!!!

கேன்ஸ் திரைப்பட விழா நடந்துகொண்டிருந்த சமயத்தில் ஒரு பெண் அரை நிர்வாணமாக ஓடிவந்ததால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ச்சியாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. மேலும் அந்நாட்டில் ரஷ்ய படையினர் கைப்பற்றிய பகுதிகளில் இருக்கும் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழா நடந்து கொண்டிருந்தபோது உக்ரைன் நாட்டில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறையை எதிர்த்து போராடிய ஒரு பெண் அரை நிர்வாணமாக சிவப்பு கம்பளத்தில் ஓடியிருக்கிறார். அவர், ‘எங்களை […]

Categories
உலக செய்திகள்

ஈராக் மீதான ரஷ்யாவின் போர் நியாயமில்லாதது…. உளறிய ஜார்ஜ் புஷ்…!!!

ரஷ்யா உக்ரேன் நாட்டின் மீது போர் கொடுத்துக் கொண்டிருப்பதை தவறுதலாக ஈராக் போர் என்று தவறுதலாக பேசிய அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான ஜார்ஜ் புஷ்ஷின் பேச்சு வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான ஜார்ஜ் புஷ் அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் இருக்கும் ஜார்ஜ் டபிள்யூ புஷ் என்னும் மையத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியிருக்கிறார். அப்போது அவர் தெரிவித்ததாவது, ரஷ்ய நாட்டில் தேர்தல் முறைகேடுகள் நடக்கிறது. அரசியலின் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 18.4 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி…. ஜி7 நாடு அறிவிப்பு….!!!

உக்ரைன் மீது ரஷ்யா போரில் ஈடுபட்டு வருகிறது. அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் வான் மற்றும் தரை வழியாக ரஷ்ய ராணுவத்தினர் நுழைந்து தலைநகர் கியவ், கார்கிவ் போன்ற பகுதிகளில் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால் உக்ரைன் நாட்டிற்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அந்நாட்டு மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு தஞ்சமடைந்து வருகின்றனர். இருப்பினும் உக்ரைனு நாட்டிற்கு அமெரிக்கா போன்ற நாடுகள் தேவையான நிதி உதவி அளித்து வருகின்றன. இந்நிலையில் உக்ரைனுக்கு ஜி7 கூட்டமைப்பு நாடுகள் 18.4 […]

Categories
உலக செய்திகள்

2 போர் விமானங்களை வழங்கி…. உக்ரைன் நாட்டிற்கு உதவிய பாகிஸ்தான் தொழிலதிபர்…!!!

பாகிஸ்தான் நாட்டின் வம்சாவளியினரான ஒரு தொழிலதிபர் உக்ரைன் நாட்டிற்கு போர் விமானங்கள் வாங்கி கொடுத்துள்ளார். பிரிட்டன் நாட்டில் வசிக்கும் பாகிஸ்தான் வம்சாவளியினரான முகமது சஹூர் என்ற தொழிலதிபர் உக்ரைன் நாட்டில் வசித்திருக்கிறார். எனவே, உக்ரைனில் நடந்த போரில் மாட்டிக்கொண்ட பல மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு பல்வேறு உதவிகளை செய்திருக்கிறார். இந்நிலையில் உக்ரைன் நாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள முகமது சஹூர் தன் நண்பர்கள் உதவியோடு அந்நாட்டிற்கு இரண்டு போர் விமானங்களை வாங்கி கொடுத்திருப்பதாக உக்ரைன் நாட்டின் பாடகியான […]

Categories
உலக செய்திகள்

தேசபக்தியை வெளிப்படுத்தும் விதமாக…. டாட்டூ குத்திக்கொண்ட உக்ரைன் மக்கள்…..!!!

ரஷ்யா-உக்ரேன் போர் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், தாய்நாட்டின் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தும் விதமாக உக்ரைன் மக்கள் தங்கள் உடலில் பச்சை குத்திக் கொண்டார்கள். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த கலை ஆயுத திருவிழாவில் உக்ரைன் மக்கள், டேட்டூ மூலமாக தங்கள் தாய்நாட்டின் மீது இருக்கும் அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த விழாவானது கடந்த வாரம் சனிக்கிழமை ஒரு தொழிற்சாலையில் நடந்திருக்கிறது. VIDEO: From odes to embattled […]

Categories
உலக செய்திகள்

உதவியாக வழங்கப்பட்ட ஆயுதம்…. நிமிடத்தில் பறிபோன சோகம்…. தவிக்கும் உக்ரைன்….!!

உக்ரைன் நோட்டோ நாடுகளிடமிருந்து வழங்கப்பட்ட ஆயுதங்களை ரஷ்யா ஆதரவு பிரிவினைவாத குழுவினர் கைப்பற்றியுள்ளனர். உக்ரைன் நாட்டில் Donetsk மாகாணத்தில் Avdiivka என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தை நோக்கி ரஷ்ய ராணுவ படைகள் முன்னேறி வந்துள்ளன. இந்நிலையில் அங்கிருந்து  அவசரமாக புறப்பட்டுள்ள உக்ரைன் வீரர்கள் ஏராளமான ஆயுதங்களை அதாவது பீரங்கி  எதிர்ப்பு ஏவுகணைகள், ஹவுட்சர் பீரங்கி மற்றும்  launcher-களை அங்கேயை விட்டு சென்றுள்ளனர். இந்த ஆயுதங்கள் உக்ரைன் நாட்டிற்கு  அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நோட்டோ நாடுகளால் வழங்கப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிற்கு பதிலடி கொடுக்க…. உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்கும் நேட்டோ…!!!

நேட்டோ அமைப்பானது, ரஷ்யாவை எதிர்த்து போர் தொடுக்க உக்ரைன் நாட்டிற்கு ராணுவ உதவி அளிப்பதாக தெரிவித்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 75 நாட்களை தாண்டி போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. உக்ரைன் படைகளும், இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கிறது. இதனால், ரஷ்ய படைகள் வெற்றி பெறுவதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா போன்ற பல நாடுகளும் பொருளாதார உதவியும் இராணுவ உதவியும் வழங்கி வருகின்றன. இந்நிலையில் ரஷ்ய நாட்டை எதிர்த்து தொடர்ந்து போரிடுவதற்கு ராணுவ உதவி […]

Categories
உலக செய்திகள்

“இனிமேல் நீங்க ரஷ்யாவுக்கு உதவ கூடாது”…. ஜி7 கூட்டமைப்பு நாடுகள்…. பிரபல நாட்டை வன்மையாக கண்டிப்பு….!!

ரஷ்யாவிற்கு உதவுவதை நிறுத்த வேண்டும் என சீனாவை ஜி7 கூட்டமைப்பு நாடுகள் வன்மையாக கண்டித்ததுள்ளது.  ரஷியாவுக்கு உதவுவதை நிறுத்த வேண்டும் என்று ஜி7 கூட்டமைப்பு நாடுகள் சீனாவை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் ஜெர்மனியின் பாலிடிக் கடற்கரையில் நடைபெற்றுள்ள மூன்று நாள் மாநாட்டில் அந்த நாடுகள் அனைத்தும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, “உக்ரைன் மீதான ரஷ்யாவின் நடவடிக்கையை நியாயப்படுத்தக் கூடாது என சீனாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரஷ்யாவின் போர் உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உணவு […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் படைகள் அதிரடி…. பதிலடியை சமாளிக்க முடியாமல்…. கார்கீவிலிருந்து வெளியேறிய ரஷ்யப்படைகள்…!!!

ரஷ்ய படைகள், உக்ரைன் படைகளின் அதிரடி தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் கார்கீவ் நகரிலிருந்து பின் வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்நாட்டின் கார்கீவ் என்ற முக்கிய நகரை கைப்பற்ற ரஷ்யப்படை தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. கார்கிவ் நகரமானது, அந்நாட்டின் கோட்டை நகரம் எனப்படுகிறது. ரஷ்ய படையினர் இரண்டு மாதங்களுக்கும் அதிகமாக முயற்சி மேற்கொண்டும், அவர்களால் கார்கீவ் நகரை கைப்பற்ற முடியவில்லை. இந்நிலையில், உக்ரைன் படைகள் ரஷ்யப்படைகளை எதிர்த்து […]

Categories
உலக செய்திகள்

ரஷிய துருப்புகளின் காட்டுமிராண்டித்தனம்…. 570 சுகாதார மையங்கள், 101 மருத்துவமனைகள் அழிப்பு…. உக்ரைன் அதிபரின் ஆதங்கம்….!!

உக்ரைனில்  570 சுகாதார மையங்களை ரஷிய துருப்புகள் அழித்துள்ளதாகவும், ரஷியாவின் இந்த செயல் முட்டாள்தனமானது எனவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.  உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இரண்டு மாதங்களுக்கும் மேல் தொடர்ந்து நீடித்து வருகின்றது. இந்நிலையில் உக்ரைனில் கிழக்கு பிராந்தியமான டான்பாசில் ரஷ்ய தனது கவனத்தை செலுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் முதல்  உக்ரைனில்  570 சுகாதார மையங்களை ரஷிய துருப்புகள் அழித்துள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைனில் பள்ளிகள் மற்றும் சுகாதார […]

Categories
உலக செய்திகள்

போர் தொடுத்ததை கண்டிக்கும் விதமாக…. ரஷ்யாவில் இருந்து வெளியேறிய பிரபல நிறுவனம்….!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை கண்டித்து ரஷ்யாவில் இருந்து சிமென்ஸ் நிறுவனம்  வெளியேறியது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ராணுவ படைகள் போர் தொடுத்ததை கண்டித்து ஜெர்மனி சிமென்ஸ் நிறுவனமானது ரஷ்யாவிலிருந்து வெளியேறியுள்ளது. இந்நிலையில் 1851-ஆம் ஆண்டு மாஸ்கோ, செயின்ட் பீட்டர்பர்க் போன்ற நகரங்களில் சீமென்ஸ் நிறுவனம் தந்தி தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்த சீமென்ஸ் நிறுவனமானது கடந்த 170 வருடங்களாக ரஷ்யாவில் செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் தொழில் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான சீமென்சின் மொத்த […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவும் அமெரிக்காவும் முயற்சித்தால்…. உக்ரைன் போரை நிறுத்த முடியும்…. இத்தாலி பிரதமர் பேச்சு…!!!

இத்தாலி நாட்டு பிரதமர், ரஷ்யா மற்றும் அமெரிக்கா இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினால் உக்ரைன் நாட்டின் போரை நிறுத்த முடியும் என்று கூறியிருக்கிறார். உக்ரைனில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவர, அமெரிக்கா மற்றும் ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இத்தாலி நாட்டின் பிரதமரான மரியோ ட்ராகி கூறியிருக்கிறார். நேற்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேசியுள்ளார். அதனைத்தொடர்ந்து அவர் தெரிவித்ததாவது, அமைதியின் வழி, அதிக சிக்கல் கொண்டது என்பதை அமெரிக்க ஜனாதிபதியும் நானும் அறிந்திருக்கிறோம். எனினும், […]

Categories
உலக செய்திகள்

மால்டோவாவில் தஞ்சம் புகுந்த உக்ரைன் அகதிகள்… நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ஐநா பொதுச்செயலாளர்…!!!

ரஷ்ய தாக்குதலால் உக்ரைன் மக்கள் பக்கத்து நாடான மால்டோவாவில் தஞ்சம் புகுந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் பக்கத்து நாடான மால்டோவாவிற்கு ஐநா சபை பொதுச் செயலாளரான அன்டோனியோ குட்டரஸ் இரண்டு நாட்கள் பயணமாக சென்றுள்ளார். ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் நாட்டிலிருந்து வெளியேறி மால்டோவாவில் அகதிகளாக தஞ்சம் புகுந்தவர்களை ஐநா பொதுச்செயலாளர் சந்தித்து பேசியிருக்கிறார். அவர்கள் இருக்கும் குடியிருப்புகளுக்கு சென்று ஆறுதல் கூறியிருக்கிறார். அகதிகள் அதிகமாக குடியேறியதால் அங்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை எதிர் கொள்வதற்காக மால்டோவாவிற்கு கூடுதலான ஆதரவை […]

Categories
உலகசெய்திகள்

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க விரைவுபடுத்தும் மசோதா…. கையெழுத்திட்ட அதிபர் ஜோ பைடன்….!!!!!!!

ரஷ்யாவிற்கு எதிராக போரிடுவதற்கு உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவது விரைவுபடுத்தும் மசோதாவில் அமெரிக்க அதிபர் கையெழுத்திட்டுள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக போரிட உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவது விரிவுபடுத்துவதற்கான மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலமாக ரஷ்ய  படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் ஆயுதங்கள், பீரங்கி, விமான எதிர்ப்பு ஏவுகணைகள், ராணுவ டேங்க்  எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் பிற சக்தி வாய்ந்த மேற்கத்திய ஆயுதங்கள் போன்றவற்றை பயன்படுத்த அனுமதி வழங்கப்படும். மேலும் புதினின் மிருகத்தனமான போருக்கு எதிராக […]

Categories
உலக செய்திகள்

திடீர் பயணமாக…. உக்ரைன் சென்ற ஜோ பைடன் மனைவி…. அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவியுடன் சந்திப்பு…!!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மனைவியான ஜில் பைடன், உக்ரைன் நாட்டிற்கு சென்று அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவியை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ஏறக்குறைய 75 நாட்களை கடந்து தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. எனவே, உக்ரேன் நாட்டிற்கு அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் உதவி செய்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி ஜில் பைடன், திடீரென்று உக்ரைன் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். அங்கு, உஹோரோடா என்னும் நகரில் உக்ரைன் ஜனாதிபதியான ஜெலன்ஸ்கியின் மனைவி  […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் பயங்கரம்… பள்ளிக்கூடத்தில் குண்டுவீச்சு தாக்குதல்…. 60 நபர்கள் உயிரிழப்பு…!!!

உக்ரைன்  நாட்டில் பள்ளிக்கூடம் ஒன்றின் மீது குண்டு வெடிப்பு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் 60 நபர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.  உக்ரைன் நாட்டில் ரஷ்யா தொடர்ந்து தீவிரமாக போர் தொடுத்து வருவதால் பக்கத்து நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்திருக்கிறார்கள். பெண்கள், குழந்தைகள் உட்பட பொதுமக்கள், ராணுவ வீரர்கள் என்று பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் வீடுகளும் கட்டிடங்களும் குண்டுவீச்சு தாக்குதலில் பலத்த சேதமடைந்திருக்கிறது. இந்த போர் மேலும் தொடரும் என்று கூறப்பட்டிருப்பதால், சொந்த நாட்டிலேயே மக்கள் […]

Categories
உலக செய்திகள்

தைவானை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும்…. பிரபல நாட்டின் விருப்பம்…. அமெரிக்கா கருத்து….!!!!!

உக்ரைன் போர் காரணமாக தைவானை ஆக்கிரமிக்க விரும்பும் சீனாவின் முடிவு ஆலோசனைக்கு உட்படுத்தப்படுகிறது. தைவானை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என சீனா விருப்பப்படுகிறது. ஆனால் உக்ரைன்  போரின்  படிப்பினைகளை தெரிந்தால் சீனா இதுகுறித்து ஆலோசனை மேற்கொள்ளும் என அமெரிக்க உளவுத்துறை இயக்குனராக இருக்கும் பில் பார்ன்ஸ் தெரிவித்துள்ளார். இவர் நேற்று அளித்துள்ள பேட்டியில் கூறிய போது, தைவான் பகுதியைச் சீனாவின் ஒரு மாகாணமாக சீன அரசு பார்த்து வருகிறது. அதே நேரத்தில் தைவானை சீனாவுடன் இணைக்கும் தனது […]

Categories
உலக செய்திகள்

அஜோவ் உருக்காலையில் மீட்கப்பட்ட 300 மக்கள்… அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட தகவல்…!!!

உக்ரைன் நாட்டில் உள்ள அஜோவ் உருக்காலையிலிருந்து 300க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டதாக அதிபர் ஜெலன்ஸ்கி தகவல் வெளியிட்டுள்ளார். உக்ரைன் நாட்டில், ரஷ்யா சுமார் 75 நாட்களுக்கும் மேலாக தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. அந்நாட்டின் மரியுபோல் நகரத்தில் இருக்கும் அஜோவ் உருக்கு ஆலையில் பலர் மாட்டிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அங்கிருந்து 300க்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு அதிபரான ஜெலன்ஸ்கி தெரிவித்திருக்கிறார். அங்கு தாக்குதலில் காயம் ஏற்பட்டவர்களையும், மருத்துவர்களையும் மீட்பதற்காக இரண்டாம் கட்ட வெளியேற்றம் நடைபெற்றது. மேலும், […]

Categories
உலக செய்திகள்

“இதை நாங்க செய்ய மாட்டோம்”…. போர் குறித்து…. ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வெளிப்படையான தகவல்….!!

உக்ரைன் மீது ரஷ்ய அணு ஆயுத தாக்குதலை நடத்தாது என்று ரஷ்ய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யா அணு ஆயுத தாக்குதல்களை நடத்தலாம் என உக்ரைனை எச்சரித்துள்ளனர். இதுகுறித்து ரஷ்ய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அலெக்ஸி சைய்ட்செவ் கூறியதாவது “உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுத தாக்குதல்கள் நிகழ்த்தாது. மேலும் இது […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய கப்பலை மூழ்கடிக்க…. ரகசியமாக உக்ரைன் நாட்டிற்கு உதவிய அமெரிக்கா…. வெளியான தகவல்…!!!

ரஷ்ய நாட்டின் மிகப்பெரிய போர்க்கப்பலை மூழ்கடிப்பதற்காக, உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா ரகசியமாக தகவல் அளித்து உதவியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய நாட்டின் மாஸ்க்வா என்ற மிகப்பெரிய போர்க்கப்பல் கருங்கடலில் இருந்து கடல்வழி தாக்குதல் மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி அன்று அந்தக் கப்பல் தீப்பற்றி எரிந்து கடலில் மூழ்கி விட்டது. அந்த கப்பலை உக்ரைன் 2 நெப்டியூன் ஏவுகணைகள் மூலம் தாக்கி அழித்ததாக தெரிவித்தது. இந்நிலையில், அமெரிக்காவின் ஒரு அதிகாரி, ரஷ்ய […]

Categories
உலக செய்திகள்

“இருளில் ஒரு வெளிச்சம்”…. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டென்மார்க் மக்கள்…. நன்றி தெரிவித்த அதிபர் ஜெலன்ஸ்கி….!!

உக்ரைனுக்கு ஆதரவாக டென்மார்க்கில் ஆர்ப்பாட்டம் நடத்திய பொதுமக்களை உக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி வரவேற்றுள்ளார்.  டென்மார்க் நாட்டில் மத்திய கோபன்ஹேகன் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தீப்பந்தம் ஏந்தி உக்ரைனுக்கு ஆதரவாகக் களம் இறங்கியுள்ளனர். இதனையடுத்து உக்ரைன் மக்களுடன் டென்மார்க் மக்கள் துணை இருப்பதை வெளிப்படுத்தியவாறு “இருளில் ஒரு வெளிச்சம்” என்ற தலைப்பில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்களை வரவேற்ற ஜெலன்ஸ்கி “ஐரோப்பாவிற்குள் போர் மூண்டுள்ளது மிருகத்தனமானது” என்று கூறியவாறு டென்மார்க் மக்களுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் கோர விபத்து…. 17 பேர் பலி…. இரங்கல் தெரிவித்த அதிபர் ஜெலன்ஸ்கி….!!

பயணிகள் பேருந்தும் லாரியும் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் நாட்டில் ரிவ்னே என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று எரிபொருள் ஏற்றி சென்ற லாரி மீது பயணிகள் பேருந்து மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சுமார் 17 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போரின் போது ஏற்கனவே நிறைய உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விபத்தில் மக்கள் உயிரிழந்துள்ளதால் அந்நாடு மேலும் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

இத்தனை நாட்களாக நீடிக்கும் என்று நினைக்கவில்லை… உக்ரைன் போர் குறித்து பெலாரஸ் அதிபர் கருத்து…!!!

உக்ரைன் போர் இத்தனை நாட்களாக நீடிக்கும் என்று தான் நினைக்கவில்லை என பெலாரஸ் நாட்டின் அதிபர் கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 70 நாட்களை தாண்டி தீவிரமாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், உக்ரைன் போர் இத்தனை நாட்களாக நீடித்து கொண்டிருக்கும் என நினைக்கவில்லை என்று பெலாரஸ் நாட்டின் அதிபரான அலெக்சாண்டர் லுகாஷென்கோ கூறியிருக்கிறார். இதுபற்றி, அலெக்சாண்டர் மேலும் தெரிவித்ததாவது, இந்த போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு நான் பல நடவடிக்கைகளை செய்தேன். எந்த போரையும் நாங்கள் […]

Categories
உலக செய்திகள்

போரை உடனே நிறுத்துங்கள்…. இந்தியா-பிரான்ஸ் இணைந்து கூட்டறிக்கை…!!!

உக்ரைனை எதிர்த்து ரஷ்யா மேற்கொள்ளும் போர் தொடர்பில் இந்தியாவும் பிரான்சும் சேர்ந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டிருக்கின்றன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது, பிரான்ஸ் நாட்டின் அதிபரான இம்மானுவேல் மேக்ரோனை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். 2 நாடுகளின் நலன்கள் தொடர்பில் இருவரும் ஆலோசனை செய்திருக்கிறார்கள். அதனைத்தொடர்ந்து உக்ரைனில் ரஷ்யா போர் தொடுப்பது தொடர்பில் இந்தியாவும் பிரான்சும் சேர்ந்து கூட்டறிக்கையை வெளியிட்டிருக்கின்றன. உக்ரைன் நாட்டில் நடக்கும் மனிதாபிமான பிரச்சனைக்கு இந்தியா மற்றும் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன்-ரஷ்யா போர்…. தீவிர அணு ஆயுத பயிற்சியில் ரஷ்யப்படைகள்….!!!

உக்ரைனை எதிர்த்து நடக்கும் போரில் ரஷ்ய படைகள், அணு ஆயுத தாக்குதலை மேற்கொள்ள போர் பயிற்சியை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டை எதிர்த்து 70 நாட்களை கடந்து தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. உக்ரைனும் இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. அமெரிக்கா  மற்றும் மேற்கத்திய நாடுகள் உக்ரைன் நாட்டிற்கு ஆயுத உதவிகளும் நிதிஉதவியும் அளித்து வருகின்றன. இந்நிலையில் ஐரோப்பிய யூனியனில் உறுப்பினர்களாக இருக்கும் லிதுவேனியா, போலந்து போன்ற நாடுகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் இருக்கும் பால்டிக் […]

Categories
உலக செய்திகள்

ஆக்ரோஷமான தாக்குதல்…. சிக்கி தவித்த பூனை…. தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கை….!!

போரோடியங்கா நகரில் ரஷ்ய ராணுவ படைகள் நடத்திய தாக்குதலில் சேதமடைந்துள்ள கட்டிடத்தின் உள்ளே பூனை சிக்கித்தவித்தது. உக்ரைன் நாட்டில் கீவ்வின் வடமேற்கில் போரோடியங்கா என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் ரஷ்ய ராணுவ படைகள் நடத்திய தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் சேதமடைந்த அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில்  பூனை சிக்கி தவித்துக்கொண்டிருந்தது. இந்தப் பூனையை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் மீட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த பூனைக்கு மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |