Categories
உலக செய்திகள்

உக்ரைனில் திரும்புகிறதா இயல்புநிலை….!! மது விற்பனை 5 மணி நேரம் அனுமதி…!!

உக்ரைன் தலைநகர் கீவ்வில் மது விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டது. உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே போர் நடைபெற்று வருவதை தொடர்ந்து உக்ரைனில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மது விற்பனைக்கான தடையை உக்ரைன் அரசு தளர்த்தியுள்ளது. அதன்படி உக்ரைன் தலைநகர் கீவ்வில் முற்பகல் 11 மணி தொடங்கி பிற்பகல் 4 மணி வரை மொத்தம் 5 மணி நேரம் மது விற்பனை செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பின்னர் […]

Categories
உலக செய்திகள்

ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கிராம மக்கள்…!! உக்ரைனில் நெகிழ்ச்சி சம்பவம்..!!

ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்ட உக்ரைன் கிராமங்களை மீட்ட உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு அந்த கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்ட உக்ரைன் Irpin நகரமும், Kyivக்கு அருகில் உள்ள Hostomel விமான தளமும் உக்ரைன் வீரர்களால் மீட்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் செர்னோபில் அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதியையும் உக்ரைன் வீரர்கள் தங்கள் வசம் கொண்டு வந்துள்ளனர். அதேபோல் ரஷ்ய வீரர்களால் கைப்பற்றப்பட்ட கிராமம் ஒன்றை உக்ரைன் வீரர்கள் மீட்டதைத்தொடர்ந்து அந்த […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு ரூ. 2220 கோடி மதிப்பில் ராணுவ உதவி…!! அமெரிக்கா முடிவு…!!

உக்ரைனுக்கு ரூபாய் 2,250 கோடி மதிப்பிலான ராணுவ உபகரணங்கள் வழங்க அமெரிக்கா அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை சமாளித்த பதில் தாக்குதல் நடத்தவும் உக்ரைனின் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்தவும் இந்த உபகரணங்களை வழங்க உள்ளதாக கூறியுள்ளார். அமெரிக்கா வழங்க உள்ள இந்த உபகரணங்களின் வரிசையில் லேசர் ராக்கெட், இருளிலும் குறிபார்த்து தாக்க உதவும் கருவிகள், ட்ரோன்கள் தளவாட உதிரி பாகங்கள், வெடி […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…நடுவானில் சென்ற ரஷ்யாவின்Mi-28 ஹெலிகாப்டர்… வீரர்களின் நிலை என்ன…?

ரஷ்யாவின்Mi-28 ஹெலிகாப்டரை உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து 37வது நாளாக படை எடுத்து வரும் ரஷ்யா,  அந்நாட்டின் தலைநகர் கீவ் அருகே தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளதாக நகர மேயர் கூறியுள்ளார். இந்நிலையில் இன்று காலைLuhansk-ல் ரஷ்ய ஹெலிகாப்டரை உக்ரைன் ராணுவம் படையினர் சுட்டு வீழ்த்தி இருக்கிறார்கள். Luhansk-ல் உள்ள Holubivka கிராம வான்வெளியில் குறித்த ரஷ்ய ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அந்த வீடியோவில் வான்வெளியில் […]

Categories
உலக செய்திகள்

முடிவுக்கு வருமா உக்ரைன் ரஷ்ய போர் …?? காணொலி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை…!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து 37வது நாளாக போர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது சமரச பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் அலுவலகமும் உறுதிபடுத்தியுள்ளது. ஏற்கனவே ரஷ்யா மற்றும் உக்ரைனை சேர்ந்த பிரதிநிதிகளுக்கு இடையே துருக்கியில் நடைபெற்ற சமரச சந்திப்பிற்கு பிறகு மூன்று நாட்கள் கழித்து தற்போது இந்த காணொலி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய எண்ணெய் கிணறுகளில் உக்ரைன் ராணுவம் தாக்குதல்…!! கொழுந்து விட்டு எரியும் தீயால் பரபரப்பு…!!

உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து 37வது நாளாக போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் வான் பரப்புக்குள் உக்ரைன் ராணுவம் புகுந்து எண்ணெய்க் கிணறுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவில் உள்ள பெல்கோரோட் என்னும் பகுதியில் அமைந்திருக்கும் என்னை கிணற்றின் மீது உக்ரைன் ராணுவம் நடத்திய தாக்குதலில் எண்ணெய் கிணறு கொழுந்துவிட்டு எரிகிறது. இதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 120க்கும் மேற்பட்ட தீயணைப்பு பணியாளர்கள் என்னை கிடங்குகளில் பற்றி எரியும் தீயை […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் தொடரும் அவலம்….!! ராணுவ வீரர்களை பிணை கைதிகளாக பிடித்துச் சென்ற ரஷ்ய படையினர்….!!

உக்ரைன் ரஷ்யா போர் தொடர்ந்து 37வது நாளாக நடைபெற்று வருகின்ற நிலையில் போரை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. ஆனால் எந்த முயற்சியும் எடுபடவில்லை. இந்நிலையில் உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள பிரிப்யாட் நகர் அருகே செர்னொபெல் அணு உலையை வீரர்கள் கைப்பற்றினர். ஏற்கனவே இந்த அணு உலையில் 1986ம் ஆண்டு ஏற்பட்ட மாபெரும் விபத்து காரணமாக செயல்படாமல் இருந்து வந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் தற்போது செயல்பட்டு […]

Categories
உலக செய்திகள்

இன்னும் சில நாட்களில்…. முட்டைக்கு பற்றாக்குறை ஏற்படும்…. பிரிட்டன் விவசாயிகள் எச்சரிக்கை…!!!

பிரிட்டனில் இன்னும் சில நாட்களில் கோழி முட்டைக்கு கடும் பற்றாக்குறை ஏற்படலாம் என்று விவசாயிகள் எச்சரித்திருக்கிறார்கள். விவசாயிகள், உற்பத்தி செலவுகள் அதிகரித்து வருகிறது எனவும் அதனை ஈடுசெய்வதற்கு வர்த்தகர்கள் விலையை அதிகரிக்கவில்லையெனில் நாட்டில் முட்டைக்கு கடும் பற்றாக்குறை ஏற்படும் என்று கூறியுள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் முட்டை பற்றாக்குறையை தவிர்க்க இயலாது என்று பிரிட்டன் முட்டை உற்பத்தியாளர்கள் கவுன்சில்  கூறியிருக்கிறது. உற்பத்தி செலவு வெகுவாக அதிகரித்துள்ளது. தொழில் திவாலாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, 10-15% விவசாயிகள், […]

Categories
உலக செய்திகள்

ரொம்ப தைரியம் தான்….!! உக்ரைன் சாலைகளில் கண்ணிவெடிகள்…!! அனாயசமாக கடந்து சென்ற வாகன ஓட்டிகள்….!!

உக்ரைன் சாலைகளில் ரஷ்ய வீரர்கள் விட்டுச்சென்ற கண்ணிவெடிகளை உக்ரைன் வாகன ஓட்டிகள் கடந்து செல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. உக்ரைன் தலைநகரமான கிவ் அருகே உள்ள போரோடியங்கா என்ற பகுதியில் உள்ள சாலைகளிலும் சுரங்கப்பாதைகளிலும் ரஷ்ய வீரர்கள் ஏராளமான கண்ணிவெடிகளை வைத்துள்ளனர். உக்ரைன் ராணுவ வீரர்கள் அந்த வழியாக வாகனத்தில் வரும்போது அவர்களை அழிக்கும் பொருட்டு ரஷ்ய வீரர்கள் இவ்வாறு செய்துள்ளனர். இதனை கண்ட உக்ரைன் வாகன ஓட்டிகள் அந்த கண்ணிவெடிகளின் மீது கார் டயர் படாதவாறு […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. உலக நாடுகளில் உணவுப்பஞ்சம்?…. உதவிக்கரம் நீட்டும் கனடா…!!!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உக்ரைன் போரால் உலகநாடுகள் எதிர்கொள்ள உள்ள உணவு, எரிசக்தி தட்டுப்பாட்டை தீர்க்க உதவி செய்வோம் என்று கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக கடுமையாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்த போரால், இரண்டு நாடுகளின் அடிப்படை வசதி, பொருளாதாரம் உணவுத் தேவை மட்டும் பாதிக்கப்படவில்லை. உலக நாடுகளிலும் உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இனி வரும் நாட்களில் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் படைகளுக்கு தெரியாமல் உதவிய ரஷ்யா…. அப்படி என்ன உதவி…? சுவாரஸ்ய தகவல்…!!!!

ரஷ்யப்படையினரின் ஆயுதங்களே அவர்களுக்கு எதிராக மாறியுள்ளது. உக்ரைன் நாட்டின் Kyiv என்ற நகரத்திற்கு 40 மைல்கள் தூரத்தில் இருக்கும் Rudnytske என்ற சிறிய கிராமத்தை ரஷ்ய படைகளிடமிருந்து உக்ரைன் மீட்டுவிட்டது. அங்கு ரஷ்ய படை, 3 tank-கள்,  ஆயுதமேந்திய ஒரு கனரக வாகனத்தை விட்டுச் சென்றிருக்கிறார்கள். இதேபோன்று ரஷ்ய படையினர் கைப்பற்றிய Irpin நகரத்தையும் உக்ரைன் மீட்டு விட்டது. அந்த பகுதியிலும்  BMD-4M என்ற ராணுவத்தில் புகழ்வாய்ந்த ஒரு போர் வாகனத்தை அவர்கள் விட்டுச் சென்றுவிட்டனர். தற்போது […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்… அரசாங்க கட்டிடத்தில் ஏவுகணை தாக்குதல்… 7 பேர் உயிரிழப்பு…!!!

உக்ரைன் நாட்டில் அரசாங்க கட்டிடத்தில் ரஷ்ய படைகள் மேற்கொண்ட தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யப்படைகள், உக்ரைன் நாட்டில் ஒரு மாதத்திற்கும் மேலாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் மைக்கோலேவ் பகுதியில் இருக்கும்  அரசாங்க கட்டிடத்தில் ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதில், அந்த கட்டிடம் சேதமடைந்தது. கட்டிடத்தின் நடுவில் மிகப்பெரிய துளை ஏற்பட்டிருக்கிறது. மேலும், தீ பற்றி எரிந்த நிலையில், மீட்பு குழுவினர், மீட்புப் பணியில் ஈடுபட்டு வருக்கிறார்கள். இத்தாக்குதலில் 7 […]

Categories
உலக செய்திகள்

இதெல்லாம் ரொம்ப அநியாயம்…. உக்ரைனுக்குள் கூலிப்படையை இறக்க இருக்கும் ரஷ்யா…. வெளியான பரபரப்பு தகவல்….!!

கிழக்கு உக்ரைனுக்கு ரஷ்யா தனது தனியார் இராணுவ அமைப்பான வாக்னர் கூலிப்படையை அனுப்பியுள்ளது என்று பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. ரஷ்யா நாட்டின் பின்னடைவைத் தொடர்ந்து அமைப்பின் மூத்த தலைவர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலிப்படையினர் போரில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும்  இது குறித்து பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியதாவது “ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு நெருக்கமானவர் என்று பெயர் பெற்ற வாக்னர் குழுவும் இதன் கூலிப்படையினரும் மாலி, […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. தீ விபத்தில் சிக்கிய உயிரியல் பூங்கா…. கங்காருவை காப்பாற்றிய நபர்…!!!

உக்ரைன் நாட்டில் எரிந்துகொண்டிருந்த வன விலங்குகள் உயிரியல் பூங்காவில் பரிதவித்து கொண்டிருந்த கங்காருக்களை காப்பாற்றியவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ரஷ்ய படைகள் ஒரு மாதத்தை தாண்டி தீவிரமாக உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் கார்கிவ் நகரத்தில் இருக்கும் ஃபெல்மேன் உயிரியல் பூங்காவின் அருகே ரஷ்யப் படைகள் மேற்கொண்ட தாக்குதலில் பூங்காவை சுற்றிலும் கடும் தீப்பற்றி எரிந்தது. இதில் விலங்குகள் பரிதவித்து வந்தன. அப்போது ஒரு தன்னார்வலர் உயிருக்கு போராடிய எட்டு கங்காருக்களை […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்… உலக குத்துசண்டை சாம்பியன் பலி…. நிச்சயம் பழி வாங்குவோம்…. பயிற்சியாளர் ஆவேசம்…!!!

உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்ட போரில் உக்ரைன் நாட்டை சேர்ந்த முதல் உலக குத்துச்சண்டை வீரர் உயிரிழந்திருக்கிறார். உக்ரைன் நாட்டில் ரஷ்யா ஒரு மாதத்தை தாண்டி தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் மரியுபோல் என்ற முக்கிய துறைமுக நகரை பாதுகாப்பதற்காக அசோவ் சிறப்பு படை பிரிவினருடன், உக்ரைனின் பிரபல குத்துச்சண்டை சாம்பியனான மாக்சிம் காகலும் கைகோர்த்திருந்தார். ⚡️ Ukrainian kickboxing champion killed in combat while defending Mariupol. Maksym Kagal, ISKA […]

Categories
உலக செய்திகள்

புடினை கடுமையாக விமர்சித்த ஜோ பைடன்… கண்டனம் தெரிவிக்கும் பிரான்ஸ்…!!!

ஒரு நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குறித்து பேசிய வார்த்தைகளுக்கு பிரான்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்ய அதிபர் குறித்து ‘For god’s sake this man cannot remain in power’ என்று கூறியிருக்கிறார். மேலும் உக்ரைன் நாட்டை தாண்டி வேறு எந்த நாட்டிற்கும் நுழைய நினைக்கக்கூடாது எனவும், குறிப்பாக நேட்டோ எல்லை பகுதிக்குள் ஒரு சிறு இடத்திலும் கால் வைக்க முயலக்கூடாது என்றும் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் கடத்தப்பட்ட மேயர்கள் கொலை…. அதிபர் ஜெலென்ஸ்கி கடும் குற்றச்சாட்டு…!!!

உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யப்படைகள் கடத்திச்சென்ற தங்கள் நாட்டின் மேயர்களில் சிலர் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தீவிரமாக போர்தொடுத்து வரும் நிலையில், அந்நாட்டின் கீவ், மரியுபோல் போன்ற முக்கிய நகரங்களை கைப்பற்ற ரஷ்யப் படைகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், உக்ரைன் அதிபர், ரஷ்ய படைகள் கடத்திச்சென்ற தங்கள் நாட்டின் மேரியர்களில் சிலர் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டியிருக்கிறார். ⚡️ Zelensky: Some mayors abducted by Russia turned up dead. “(Russians) […]

Categories
உலக செய்திகள்

இருநாட்டு அதிபர்களும் சந்தித்தால்… இது தான் நடக்கும்…. அதிரடியாக கூறிய ரஷ்ய அமைச்சர்…!!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும், உக்ரைன் ஜனாதிபதியும் சந்தித்தால் நிச்சயம் எதிர்மறையாகத் தான் இருக்கும் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ஒரு மாதத்தை தாண்டி கடுமையாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளை சேர்ந்த அதிகாரிகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் நேற்று ரஷ்யாவின் வெளியுறவு துறை அமைச்சரான செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்ததாவது, ரஷ்யா மேற்கொண்டிருக்கும் ராணுவ நடவடிக்கை தொடர்பில், துருக்கி […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் அதிபரை கொலை செய்ய முயற்சி… சிக்கிய 25 பேர் கொண்ட குழு…!!!

உக்ரேன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கியை கொலை செய்வதற்கு ரஷ்ய சிறப்பு ஏஜென்சி மேற்கொண்ட திட்டம் தடுக்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது. ரஷ்ய நாட்டின் சிறப்பு ஏஜென்சி தலைமையில் 25 நபர்கள் கொண்ட ராணுவ குழுவினரை  ஹங்கேரி-ஸ்லோவாக்கியா எல்லைப்பகுதியில் உக்ரைன் அதிகாரிகள் பிடித்துவிட்டனர். இந்த குழுவினர் உக்ரைன் அதிபரை கொல்வதையே நோக்கமாகக் கொண்டிருந்துள்ளனர். உக்ரைன் அதிபர், தங்கள் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியது முதல் ரஷ்யாவின்  முதல் இலக்கு தான் தான் என்று கூறிவந்தார். இந்நிலையில் உக்ரைன் ரஷ்ய […]

Categories
உலக செய்திகள்

ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால்…. தக்க பதிலடி கொடுப்போம்…. ரஷ்யாவை எச்சரிக்கும் நேட்டோ…!!!

நேட்டோ அமைப்பு, உக்ரைன் நாட்டின் மீது கண்மூடித்தனமான போரை மேற்கொண்டிருக்கும் ரஷ்யா ஒருபோதும் வெல்லாது என்று தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பதை தொடர்ந்து நேட்டோ அமைப்பினுடைய துணை பொதுச் செயலாளரான மிர்சியா ஜியோனா தெரிவித்திருப்பதாவது, உக்ரைன் நாட்டின் மீது கண்மூடித்தனமான தாக்குதல் கொண்டிருக்கும் ரஷ்யா ஒரு போதும் வெல்ல முடியாது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா, ரசாயனம் அல்லது அணுசக்தி தாக்குதலை மேற்கொண்டால் நேட்டோ உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். நேட்டோ அமைப்பு […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனிற்கு ஆயுத உதவி வழங்கிய ஜெர்மன்…. 1500 ‘ஸ்டெர்லா’ ஏவுகணைகள் அனுப்பப்பட்டது…!!!

ஜெர்மன் அரசின் செய்தித் தொடர்பாளர் உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் அளித்ததாக தெரிவித்திருக்கிறார். ஜெர்மன் நாட்டிலிருந்து 1,500 ஸ்ட்ரெலா 100 MG3 இயந்திர துப்பாக்கிகள், அதிகமாக 8 மில்லியன் தோட்டாக்கள் உக்ரைனிற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இதில், MG3 இயந்திர துப்பாக்கிகளானது ஜெர்மன் நாட்டின் ஆயுத படைகளுக்கான நிலையான நிலையான துப்பாக்கிகள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த துப்பாக்கிகள் பல்வேறு அமைப்புகள் பயன்படுத்தக்கூடியது. மேலும், இந்த இயந்திர துப்பாக்கிகள் ஒரு நிமிடத்திற்கு 1300 ரவுண்டுகள் சுடக்கூடியது. 1200 கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் இலக்குகளையும் […]

Categories
உலக செய்திகள்

போலந்தில் உக்ரைன் மந்திரிகளை சந்தித்த ஜோ பைடன்…. போர் குறித்து ஆலோசனை…!!!

போலந்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியையும், ராணுவ மந்திரியையும் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். உக்ரைனில் போர் நடக்கும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போலந்து  சென்றிருக்கிறார். அந்நாட்டின் வார்சா நகரத்தில், உக்ரைன் நாட்டின் வெளியுறவு மந்திரியான  டிமிட்ரோ குலேபா மற்றும் ராணுவ மந்திரியான ஒலெக்சி ரேஸ்னிகோபோன்றோரை சந்தித்து பேசியிருக்கிறார். அவர்கள் உக்ரைன் நாட்டில் தற்போது இருக்கும் நிலையை ஜோ பைடனிடம்  தெரிவித்திருக்கிறார்கள். இந்த சந்திப்பில், அமெரிக்காவின் வெளியுறவு மந்திரியான ஆண்டனி […]

Categories
உலகசெய்திகள்

ரஷ்யாவை சுற்றி செல்லும் விமானங்கள்…. அறிவியலாளர்கள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி கணக்கீடு…!!!!

உக்ரைன்  போரை அடுத்து மேலை நாடுகள் பொருளாதார தடை விதித்ததற்கு பதிலடியாக ரஷ்யா தனது வான் பரப்பு வழியை செல்ல ஐரோப்பிய நாடுகள், தென்கொரியா, ஜப்பான் போன்றவற்றின் விமானங்களுக்கும் தடை விதித்திருக்கிறது. இதனால் லண்டன், ஹெல்சிங்கி, ப்ராங்க்பர்ட்  நகரங்களில் இருந்து டோக்கியோ, சியால் நகரங்களுக்கு விமானங்கள் ரஷ்யாவை சுற்றி செல்கிறது. டோக்கியோவிலிருந்து ரஷ்யா   வழியே லண்டனுக்கு செல்வதைவிட வட பசுபிக், அலாஸ்கா, கனடா தீவு, கிரீன்லாந்து வழியாக செல்ல கூடுதலாக இரண்டரை மணி நேரம் ஆகிறது. சுற்றுப் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்… உச்சகட்ட பரபரப்பு… இராணுவ கட்டளை மையம் மீது ஏவுகணை தாக்குதல்…!!!!

உக்ரைன் ராணுவ கட்டளை மையம் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது. உக்ரைன் மீது  ரஷ்யா தொடர்ந்து 31 வது  நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி  வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ்வை  கைப்பற்ற விவரமாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன், ரஷ்ய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள்  முயற்சி செய்த போதும் அவை தோல்வியில் முடிந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யாவிற்கான ஆதரவை தொடர்ந்து வழங்கும் பெலாரஸ்”…. ஆஸ்திரேலியாவின் அதிரடி நடவடிக்கை…!!!

ரஷ்யாவுக்கான ஆதரவை தொடர்ந்து வரும் பெலாரஸ் அதிபர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது ஆஸ்திரேலியா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 31வது நாளாக போர் தாக்குதலை  நடத்தி வருகிறது. உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவிற்கு வல்லரசு நாடு ஆரம்பத்திலிருந்தே ஆதரவு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக அந்த நாட்டின் அதிபர் அலெக்சாண்டர்லு காஷென்கோவை சர்வதேச நாடுகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. இந்த சூழலில் ரஷ்யாவுக்கான ஆதரவை தொடர்ந்து […]

Categories
உலகசெய்திகள்

“நாங்களும் உதவ போறோம்”…. செயல்படும் நோட்டோ அமைப்பு…. தயார் நிலையில் படைகள்….!!

நோட்டோ அமைப்பு உக்ரைன் நாட்டிற்கு உதவும் வகையில் 8 படை குழுக்களை தயார் நிலையில் வைத்துள்ளது. உக்ரேனின் அண்டை நாடுகளில் கூடுதல் ராணுவப் படைகள் கொண்ட குழுக்களை நிறுத்த நோட்டோ அமைப்பு முடிவெடுத்துள்ளது.  இது குறித்து நோட்டோ அமைப்பின் செயலாளரான ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் கூரியாதவது ” பால்டிக்கடலில் தொடங்கி கருங்கடல் வரை 8 படை குழுக்களை நிறுத்த வேண்டும் உக்ரைனின் அண்டை நாடுகளில் நிறுத்த உள்ளோம். இதனைத்தொடர்ந்து பல்கேரியா, ஹங்கேரி, ருமேனியா மற்றும் ஸ்லோவேக்கியா போன்ற ஐரோப்பிய […]

Categories
உலக செய்திகள்

ஜி20 அமைப்பில் இருந்து ரஷ்யா வெளியேற வேண்டும்…. கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர்…!!!!!

ஜி20 அமைப்பில் இருந்து ரஷ்யா வெளியேற வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நோட்டா  நாடுகளின் உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கலந்து கொண்டுள்ளார். அப்போது அதில் பேசிய ஜோ பைடன் “உக்ரைன் படையெடுப்பு  தொடர்பாக மாஸ்கோ மீது அழுத்தத்தை அதிகரிக்கும் விதமாக பேசிய ரஷ்ய  உயிரடுக்குகள், சட்டம் இயற்றுபவர்கள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் மீதான பொருளாதாரத் தடைகளில் புதிய தொகுப்பை அறிவித்துள்ளார். மாநாட்டிற்குப் பின் பேசிய ஜோ […]

Categories
உலக செய்திகள்

“இது மிகவும் கொடூரமானது”…. பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்திய ரஷ்ய படைகள்…. குற்றம்சாட்டிய உக்ரைன் அதிபர்….!!

ரஷ்ய ராணுவ வீரர்கள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியபோது பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தியதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான போரில் வெண் பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தி ரஷ்ய ராணுவம் தாக்குதலை நடத்தியுள்ளது.  இந்த வெண் பாஸ்பரஸ் குண்டுகள் வெடித்து எரியும்போது 800 டிகிரி செல்சியசுக்கும் மேல் வெப்பநிலை உருவாகும் என்பதால் மனிதர்களுக்கு அதிக தீங்கு விளைவிக்கும் என்றும்  போரில்  இந்த குண்டுகளை பயன்படுத்துவது குற்றம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைன் நாட்டில் போபஸ்னா நகரங்களின் […]

Categories
உலக செய்திகள்

மே மாதம் முடிவடையும் போர்…. ரஷ்யாவின் திட்டத்தை தெரிவித்த உக்ரைன் ராணுவம்…!!!

உக்ரைன் நாட்டின் ராணுவம் ரஷ்யா வரும் மே மாதம் 9ம் தேதிக்குள் போரை நிறுத்திக் கொள்ள விரும்புவதாக தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டில், ரஷ்யப் படைகள் தொடர்ந்து ஒரு மாதமாகப் போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் நாட்டின் பல முக்கிய நகரங்கள் ரஷ்ய இராணுவத்தால் கைப்பற்றப்பட்டிருக்கிறது.  இதற்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பிலும் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், ரஷ்யா மே மாதம் 9ம் தேதிக்குள் போரை நிறுத்திக் கொள்ள விரும்புவதாக உக்ரைன் […]

Categories
உலகசெய்திகள்

நாங்க உக்ரைனுக்கு ஆதரவு… “உக்ரைன் வெற்றி பெறும் வரை அங்கு இந்த கொடி பறக்கும்”…!!!!!!

உக்ரைனுக்கு  ஆதரவாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உக்ரைன் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா படைகள் தொடர்ந்து நான்காவது வாரமாக போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட ஏராளமான நாடுகள்  உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் நியூயார்க்கின் உக்ரைன் தூதரக அதிகாரி ஒலெக்செய் ஹாலுபாவ், நகராட்சி அதிகாரிகள் மற்றும் நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் போன்றோர்  இணைந்து நியூயார்க் பவுலிங் க்ரீன் பூங்காவில் அமெரிக்க கொடியையும், உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் குறித்த தீர்மானம்…. இந்தியா ஏன் வாக்களிக்கவில்லை…? விளக்கமளித்த டி.எஸ் திருமூர்த்தி…!!!

உக்ரைன் பிரச்சனை தொடர்பான தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்காமல் இருந்ததற்கு என்ன காரணம்? என்று ஐ.நாவிற்கான இந்திய தூதர் தெரிவித்திருக்கிறார். ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வில் உக்ரைன் மீது நடக்கும் தாக்குதலின் மனிதாபிமான விளைவுகள்” என்னும் தலைப்பிலான தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால் இந்த தீர்மானத்திற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளவில்லை. உக்ரைன் பிரச்சினை குறித்த சிறப்பு அவசர அமர்வில் இந்த தீர்மானத்திற்கு 140 வாக்குகள் ஆதரவாக கிடைத்திருந்தது. மேலும் தீர்மானத்திற்கு எதிராக 5 வாக்குகள் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனிலிருந்து வரும் 1 லட்சம் அகதிகளுக்கு தங்கும் இடம்… வெளியான அறிவிப்பு…!!!

அமெரிக்கா உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒரு லட்சம் அகதிகளுக்கு தங்குமிடம் வழங்குதாக தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா மேற்கொண்டு வரும் போரால் அந்நாட்டிலிருந்து 35 லட்சம் மக்கள் வெளியேறியுள்ளனர். இவ்வாறு அகதிகளாக வெளியேறிய மக்கள் பக்கத்து நாடுகளான ருமேனியா, ஸ்லோவாகியா மற்றும் போலந்து போன்ற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்கா உக்ரைனிலிருந்து வெளியேறிய ஒரு லட்சம் அகதிகளுக்கு தங்குமிடம் வழங்குவதாக தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவின் ஒரு உயர் அதிகாரி, அமெரிக்கா ஒரு லட்சம் உக்ரைன் அகதிகளை வரவேற்கிறது என்று […]

Categories
உலகசெய்திகள்

உக்ரைன் ரஷ்யா விவகாரம்… பெல்ஜியத்தில் நடைபெறும்…. நோட்டா அவசர உச்சிமாநாடு…!!!!!

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் இன்று நோட்டா  அமைப்புகளின் அவசர உச்சி மாநாடு நடைபெறுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் தற்போது ஒரு மாதத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நோட்டா அமைப்பின் அவசர உச்சிமாநாடு பெல்ஜியம் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் நகரில் இன்று நடைபெறுகிறது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 30 உறுப்பு நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஜி-7 தலைவர்கள் கூட்டத்திலும் ஜோ பைடன் பங்கேற்று பேசுகிறார். மேலும் ஐரோப்பிய கவுன்சில் அமர்விலும் அவர் […]

Categories
உலகசெய்திகள்

ரஷ்யப் படைகளின் உக்கிரமான தாக்குதல்… மாநில மேயர் வெளியிட்ட அறிவிப்பு…!!!!

கார்க்கிவ்  பகுதிக்குள் நுழைந்த ரஷ்யப் படைகள் அங்கு 1,143 கட்டிடங்களை அளித்துள்ளதாக அம்மாநில மேயர் அறிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை தொடர்ந்து 25 ஆவது நாளாக நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் மீது இராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்து வருகிறது. அதே போல் உக்ரைன் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக ரஷ்யாவிற்கு  பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரிய உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான […]

Categories
உலகசெய்திகள்

ரஷ்யாவின் தொடர் தாக்குதல் … தரைமட்டமான பாலம் …. அவதியில் மக்கள்…!!!!!

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலிலிருந்து மக்கள் வெளியேறி உதவியை பாலம் தரைமட்டமாக்கப்பட்டது. உக்ரைன் நாட்டில் செர்னிஹிவ்  நகரை ரஷியப் படைகள் சுற்றி வளைத்து இருக்கின்றனர். இந்த நகரில் தண்ணீர் மற்றும் மின்சாரம் கிடையாது. மேலும் இங்கு பொதுமக்கள் வெளியேற உதவும் முக்கிய பாலத்தை ரஷ்ய படைகள் குண்டு வீசி அளித்திருக்கின்றனர். இந்த பாலம் தான் மக்களுக்கு மனிதநேய உதவிகள் சென்றடைய உதவியது. மேலும் இந்த பாலம் அங்கு உள்ள டெஸ்னா ஆற்றை கடந்து  செர்னிஹிவ் நகரை தலைநகர் கீவ்வுடன்  இணைகிறது. […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய போர்க்கப்பல்கள் அழிப்பு…. உக்ரைனில் பயங்கரமாக எரியும் துறைமுகம்… வெளியான வீடியோ…!!!

உக்ரைன் நாட்டில் இருக்கும் Berdyansk என்ற துறைமுகம் தீ பற்றி எரியும் காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. ரஷ்யப் படை மேற்கொண்ட தாக்குதலில் உக்ரைன் நாட்டின் துறைமுகம் பயங்கரமாக எரிவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த துறைமுகத்தை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் படைகள் Berdyansk என்ற துறைமுகத்தில் நின்ற  ரஷ்யாவின் போர்க் கப்பலை தாக்கி அழித்திருக்கின்றன. We are told that #Russian ships have been hit in the port of #Berdyansk. We are […]

Categories
உலக செய்திகள்

சக வீரர்களை இழந்த ஆத்திரம்…. கர்னல் மீது டாங்கை ஏற்றிய ரஷ்ய வீரர்…!!!

உக்ரைன் போரில், தங்கள் தரப்பில் அதிக இழப்பு ஏற்பட்ட கோபத்தில் ஒரு ரஷ்ய வீரர்தன் படைத் தலைவர் மீது ஒரு டாங்கை ஏற்றிருக்கிறார். ரஷ்யப் படைகள் உக்ரைன் நாட்டில் தீவிரமாக போர் தொடுத்து வருகின்றன. உக்ரைன் நாட்டிற்குள் 1500 படைவீரர்களுடைய ரஷ்ய டாங்க் படைப்பிரிவு ஊடுருவியது. இதில் ஏறக்குறைய பாதி வீரர்கள் உயிரிழந்து விட்டனர். இதனால் கடும் கோபத்தில் இருந்த ஒரு ரஷ்ய வீரர், தன் படைத் தலைவர் கர்னல் Yuri Medvedev மீது டாங்கை ஏற்றியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

இன்று நடக்கிறது…. ஐ.நா அவையின் அவசரகால சிறப்பு அமர்வு… உக்ரைன் போர் குறித்து ஆலோசனை…!!!

உக்ரைன் போர் குறித்த ஐ.நா. அவையின் அவசரகால சிறப்பு அமர்வானது, இன்று நடக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யாவின் 3 வாரங்களுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. ரஷ்யப்படைகள், உக்ரைன் நாடு முழுக்க கைப்பற்ற தீவிரம் காட்டி வருகின்றன. இரு தரப்பிலும் நடந்த பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. போரை நிறுத்த, உலக நாடுகள்  வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், உக்ரைனில் நடக்கும் போர் குறித்த ஐ.நா. அவையின் அவசரகால சிறப்பு அமர்வுக் கூட்டமானது, இன்று நடக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனிலிருந்து வெளியேறிய 35 லட்சம் மக்கள்…. ஐ.நா வெளியிட்ட தகவல்…!!!

உக்ரைன் நாட்டிலிருந்து மொத்தமாக 35 லட்சம் மக்கள் அகதிகளாக வெளியேறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 27-வ து நாளாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டின் பல நகர்கள் ரஷ்யப் படைகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன. எனினும், தலைநகரை கைப்பற்றுவதற்கு தீவிரம் காட்டி வருகின்றன. இந்தப் போரில் உக்ரைன் கடுமையாக சேதமடைந்திருக்கிறது. அந்நாட்டு மக்கள் லட்சகணக்கில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகிறார்கள். இந்நிலையில், உக்ரைன் நாட்டிலிருந்து தற்போது வரை 35 லட்சம் மக்கள் பக்கத்து நாடுகளில் […]

Categories
உலக செய்திகள்

எங்களை கூட்டணியில் பார்க்க தயாரா…. அதை உடனே செய்யுங்கள் … உக்ரைன் அதிபர் எச்சரிக்கை…!!!!

பேச்சுவார்த்தை தோல்வி மூன்றாம் உலகப்போரை ஏற்படுத்தும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன்  மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து மூன்றாவது வாரங்களாக நீடித்து வருகிறது. இந்நிலையில் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால் இதுவரை நடந்த பல கட்ட பேச்சு வார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் பேச்சுவார்த்தை தோல்வி மூன்றாம் உலகப்போரை ஏற்படுத்தும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில்ஜெலன்ஸ்கி தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியின் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் பயங்கரவாத தாக்குதல்… சின்னா பின்னமாகி உள்ள தொழிற்சாலைகள்…!!!!!

ரஷ்ய படைகள் நிகழ்த்திவரும் வான் தாக்குதலால்  மரியு  போல் நகர தொழிற்சாலைகள் வெடிக்கும் ட்ரான் காட்சிகளை உக்ரைன் அரசு வெளியிட்டிருக்கிறது. துறைமுக நகரமான மரியு  போலை மூன்று வாரங்களுக்கும் மேலாக ரஷ்யப் படைகள் முற்றுகையிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு ரஷ்யா விதித்த கெடுவை உக்ரைன்  இராணுவத்தினர் நிராகரித்துள்ளனர். இதனையடுத்து சர்வதேச வர்த்தகத்தில் மரியு போல் நகரை இடம் பெறச் செய்வதில் முக்கிய பங்காற்றிய தொழிற்சாலைகள் மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் மீது ரஷிய படைகள் […]

Categories
உலகசெய்திகள்

இந்த மனசு தாங்க கடவுள்…. உக்ரைன் அகதிகளுக்கு நிதி… ரஷ்ய பத்திரிக்கையாளரின் செயல்…!!!!

உக்ரைன் அகதிகளுக்காக நிதி திரட்டும் நோக்கத்தில் ரஷ்யாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் தனது நோபல் பரிசை ஏலம் விடுவதாக அறிவித்திருக்கிறார். ரஷ்யாவைச் சேர்ந்தவர்  டிமிட்ரி முரடேவ்(60). இவர் பத்திரிகையாளராக பணிபுரிந்து வருகிறார். நோவாயா காஸிடா என்ற பத்திரிகையின் ஆசிரியராக பணிபுரிந்து வரும் இவர் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டிருந்தது. நோபல் பரிசு தொகையினை அவர்  மாஸ்கோவில் முதுகெலும்பு பிரச்சினையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மருத்துவ செலவிற்காக வழங்கியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார தடையால்…. விலை அதிகரிப்பு…. சர்க்கரைக்கு போட்டி போடும் ரஷ்ய மக்கள்…!!!

ரஷ்யாவிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பொருளாதார தடையால் அங்கு சர்க்கரை விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுப்பதற்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் பொருளாதார தடைகளை அறிவித்தன. மேலும், போர் காரணமாக கச்சா எண்ணையின் விலையானது, உலக சந்தையில் அதிகரித்தது. தற்போது, பொருளாதார தடை காரணமாக ரஷ்ய நாட்டில் சர்க்கரை விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. Сахарные бои в Мордоре продолжаются pic.twitter.com/hjdphblFNc — 10 квітня (@buch10_04) March […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் படித்த மருத்துவ மாணவர்களுக்கு…. ரத்து செய்யப்பட்ட தேர்வு… வெளியான அறிவிப்பு…!!!!

உக்ரைன் நாட்டில் மருத்துவம் பயின்ற இறுதியாண்டு மாணவர்களுக்கு லைசென்ஸ் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் அரசு ஐந்தாம் மற்றும் இறுதி வருட மருத்துவ மாணவர்களுக்கு KROK தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இந்த தேர்வு ரத்து செய்யப்படுவது பற்றிய தகவலை இந்தியாவிற்கு சென்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் தெரிவித்துள்ளன. மூன்றாம் வருடம் பயிலும் மாணவர்களுக்கு KROK-1 தேர்வு, ஒரு வருடம் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. மேலும், இறுதி வருடம் பயிலும் மருத்துவ மாணவர்களுக்கு KROK-2 தேர்வு இல்லாமல் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. 10000 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு…. வெளியான தகவல்…!!!

உக்ரைன் போரில் ரஷ்யாவை சேர்ந்த 10000 வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 27-ஆம் நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் மரியுபோல் நகரத்தில் தான் கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அந்நகரத்தில் சுமார் மூன்று வாரங்களாக ரஷ்யப் படைகள் முற்றுகையிட்டிருக்கின்றன. ரஷ்யப்படையினர் அந்த நகரத்தை கைப்பற்ற தீவிரமாக முயன்று வருகிறார்கள். எனவே, உக்ரைன் நாட்டின் அதிகாரிகள், அந்த நகரத்தை சேர்ந்த மக்களை வெளியேற்றுவதற்கு  முயன்றனர். எனினும், தொடர் தாக்குதல்களால் மக்களை வெளியேற்ற […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் கடத்தப்பட்ட 2389 குழந்தைகள்…. ரஷ்யா மீது அதிரடி குற்றச்சாட்டு…!!!

உக்ரைன் அரசு, ரஷ்யா தங்கள் நாட்டை சேர்ந்த 2 ஆயிரம் குழந்தைகளை கடத்தி சென்றதாக  அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 27-ஆம் நாளாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இரு தரப்பிலும் பல முறை பேச்சுவார்த்தைகள் நடந்த போதும் எந்த முடிவும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொள்ளும் தாக்குதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த போரில் உக்ரைன் நாட்டின் இரண்டாயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் ரஷ்யப் படைகளால் கடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

பெரும் சோகம்… 15,000 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு… வெளியான அறிவிப்பு…!!!!

இதுவரை நடந்த 25 நாள் போரில் 15 ஆயிரம் ரஷ்ய துருப்புகள்  கொல்லப்பட்டிருக்கின்றனர். உக்ரைன் மீதான போரில் ரஷிய படை வீரர்கள் கொல்லப்படுவது தொடர்ந்து வருகிறது. இதுவரை நடந்துள்ள 25 நாள் போரில் 15 ஆயிரம் ரஷிய துருப்புகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். என உக்ரைன் ராணுவ உயர் அதிகாரிகள் பேஸ்புக் பதிவில் நேற்று தெரிவித்துள்ளனர். மேலும், ரஷியாவின் 476 டாங்குகள், 200 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், டிரோன்கள், 1,487 கவச வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளன எனவும் அதில் கூறப்பட்டுள்ளார். அதே […]

Categories
உலக செய்திகள்

விளாடிமிர் புடினின் ஆட்சியை கவிழ்க்க முயற்சி…. உக்ரைன் உளவுத்துறை வெளியிட்ட தகவல்…!!!

ரஷ்ய நாட்டின் பணக்காரர்கள் அதிபர் விளாடிமிர் புடினின் ஆட்சியை கவிழ்க்க முயல்வதாக உக்ரைன் நாட்டின் உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது கடுமையாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. எனவே, ரஷ்யா மீது பொருளாதார தடைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும், ரஷ்யாவில் உள்ள அலிகார்க்ஸ் என்ற குழுவின் சொத்துக்கள் பல நாடுகளில் முடக்கப்பட்டிருக்கின்றன. இந்த குழு அந்நாட்டின் அரசை மறைமுகமாக கட்டுப்படுத்தும் அதிகாரமும், அரசாங்க முடிவுகளை தீர்மானிக்கக் கூடிய அதிகாரமும் பெற்றிருக்கிறது. இந்நிலையில், இந்த அலிகார்க்ஸ் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனின் இந்த பகுதிகள் கைப்பற்றப்பட்டது….பிரிட்டனின் உளவு பிரிவு வெளியிட்ட தகவல்….!!!

ரஷ்யா உக்ரைனின் பல இடங்களை கைப்பற்றியுள்ளதாக,  பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவு பிரிவு தெரியப்படுத்தியுள்ளது. ரஷ்யா உக்ரைன் இடையிலான போர்  தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.மேலும் உக்ரைனின் கிழக்கு பகுதியை ரஷ்ய ராணுவ படைகள் முழுவதும் கைப்பற்றியுள்ளதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவு பிரிவு தெரியப்படுத்தியுள்ளது. அதன்படி கைப்பற்றப்பட்ட நகரங்களின் மீது ரஷ்ய படைகள் கடந்த வாரம் குண்டு வீசி தாக்குதல்  நடத்தியுள்ளனர்.  இந்த  தாக்குதலில்  115 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் 140 க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளதாகவும்  உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யப்படைகள் மேற்கொண்ட தாக்குதல்…. கடும் சேதமடைந்த உருக்கு ஆலை அடைப்பு…!!!

ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் நாட்டில் இருக்கும் மரியுபோல் நகரத்தின், மிகப்பெரிய உருக்கு ஆலை அடைக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நான்கு வாரங்களுக்கும் அதிகமாக தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. அந்நாட்டின் பல நகரங்களை ஆக்கிரமித்துள்ள ரஷ்யா, தலைநகர் கீவ், கார்கிவ்  மற்றும் மரியுபோல் போன்ற நகர்களை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் உக்ரைன் நாட்டிலிருந்து தற்போது வரை ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் மறைந்திருப்பதாக அகதிகளுக்கான ஐ.நா […]

Categories

Tech |