Categories
உலக செய்திகள்

உடனடியாக வெளியேறிவிடுங்கள்…. உக்ரைன் மக்களை எச்சரிக்கும் துணை பிரதமர்…!!!

உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக வெளியேறுங்கள் என்று துணை பிரதமர் வலியுறுத்தியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது 42-ஆம் நாளாக ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. ரஷ்ய படைகள், உக்ரைன் நாட்டின் எரிபொருள் கிடங்குகளில் ஏவுகணை தாக்குதல் நடத்தி அழித்திருக்கிறார்கள். இந்நிலையில் உக்ரைன் நாட்டின் துணை பிரதமரான Iryna Vereshchuk, வெளியேறுவதற்கு வாய்ப்புகள் இருக்கும் சமயத்திலேயே நாட்டின் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வெளியேறி விடுங்கள் என்று கூறியிருக்கிறார். இதில், டொனெட்ஸ்க், கார்கிவ், லுஹான்ஸ்க் போன்ற […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் நடக்கும் கொடூரங்கள்…. நிர்வாணமாக சடலங்கள்…வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்…!!!

உக்ரைன் நாட்டில், ரஷ்ய படைகள் மேற்கொண்ட கொடூரமான நிகழ்வுகளை வெளிப்படுத்தும் வகையில் சில புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. ரஷ்யப் படைகள் உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து சுமார் 43 நாட்களாக தொடர்ந்து போர் கொடுத்து வருகிறார்கள். இதில் மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டு வருகிறார்கள். போர்  தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரான லிசியா வலிலெங்கோ புகைப்படங்கள் சிலவற்றை தற்போது வெளியிட்டிருக்கிறார். #Ukraine will restore and rebuild. Every home, every road. We […]

Categories
உலகசெய்திகள்

“இதிலிருந்து ரஷ்யாவை நீக்க வேண்டும்”… ஐக்கிய நாடு சபையில் இன்று வாக்கெடுப்பு….!!!!!

ரஷ்யாவை மனித உரிமை குழுவிலிருந்து நீக்க வேண்டும் என மேற்கத்திய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  உக்ரைன்  நகரான புச்சாவில்  ஏராளமான அப்பாவி மக்களை ரஷ்ய படையினர் கொன்று குவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ரஷ்யாவை  மனித உரிமை குழுவில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என மேற்கத்திய நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நாற்பத்தி ஏழு உறுப்பினர்களைக் கொண்ட ஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை நீக்குவது தொடர்பாக ஐநா பொதுச்சபையில் இன்று வாக்கெடுப்பு நடைபெற […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் குடியேற காத்துக்கிடக்கும் உக்ரைன் அகதிகள்….!! கண்கலங்க வைக்கும் புகைப்படம்…!!

போர் காரணமாக உக்ரைனில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறுவதற்காக முயற்சி செய்து வரும் உக்ரைன் அகதிகள் அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் முகாம்கள் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே உக்ரைனில் இருந்து வெளியேறும் ஒரு லட்சம் அகதிகளுக்கு அமெரிக்காவில் இடம் கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ள நிலையில் அமெரிக்காவையும் மெக்சிகோவையும் இணைக்கும் டிஜூவானா நகரத்தில் குழந்தைகள் பெண்கள் உட்பட சுமார் 700 உக்ரைன் மக்கள் அமெரிக்க குடியுரிமைக்காக காத்து கிடைப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் தாக்குதல்…!! போப் பிரான்சிஸ் கடும் கண்டனம்….!!

உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்பில் லட்சக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக புச்சா நகரில் ஆயிரக்கணக்கானோர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் வீரர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு போப் பிரான்சிஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டில் இருந்து அவருக்கு அனுப்பப்பட்ட கறைபடிந்த உக்ரைன் தேசிய கொடியை போப் பிரான்சிஸ் ஆயிரக்கணக்கானோருக்கு முன்னிலையில் உயர்த்தி காட்டினார். உக்ரைன் போரில் இருந்து உயிர் தப்பிய சிறுவர்களை மேடைக்கு அழைத்து போப் பிரான்சிஸ் உரையாற்றினார்.

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர் : பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி…!! உக்ரைன் மக்கள் உருக்கம்…!!

உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய தாக்குதலில் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரை நீத்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஏற்றி அந்நாட்டு மக்கள் பிரார்த்தனை செய்தனர். கீவ் புறநகர் பகுதிகளில் இருந்து ரஷ்யப் படைகள் வெளியேறி உக்ரைனின் தெற்கு பகுதிக்கு நகர்ந்து சென்றுள்ளனர். இதில் புச்சா நகரம் கொடூர தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. உக்ரைன் தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள மஞ்சள் மற்றும் நீல நிற கண்ணாடி பாட்டில்களில் மெழுகுவர்த்தியை ஏற்றி அந்நாட்டின் வரைபட வடிவில் […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைன் மக்களின் துன்பம் மிகக் கொடியது….!!” இஸ்ரேல் பிரதமர் பேச்சு…!!

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் தாக்குதலில் கொத்துக் கொத்தாக மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பல்வேறு நாட்டு தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. அந்த வரிசையில் இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ரஷ்ய வீரர்கள் புச்சா நகரை விட்டு வெளியேறிய பிறகு அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மிகவும் மோசமானவை. இறந்தவர்களின் உடல்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தது. புச்சா நகர் சுடுகாடு போல் காட்சியளிக்கிறது. […]

Categories
உலகசெய்திகள்

ரஷ்ய தொழிலதிபரின் சொகுசு கப்பலை… பறிமுதல் செய்த ஸ்பெயின்…!!!!!!

ரஷ்யாவின் 99 மில்லியன் டாலர் மதிப்புடைய 70 மீட்டர் நீளமான சொகுசு கப்பலை ஸ்பெயின் கடற்படை அதிகாரிகள் கைப்பற்றி இருக்கின்றனர். viktor vekselberg என்ற ரஷ்ய தொழிலதிபருக்கு சொந்தமான இந்த கப்பல் உக்ரைன்  போருக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்காவின் சார்பில் கைப்பற்றப்பட்டு இருந்தது. மேலும் கப்பலில் இருந்த தரவு ஆவணங்கள் மற்றும் கருவிகள் கைப்பற்றப்பட்டதாக ஸ்பெயின் நாட்டு காவல் அதிகாரிகள் கூறியுள்ளனர். அமெரிக்க வங்கி கடன் மோசடி பண பரிவர்த்தனை மீறல் மற்றும் அமெரிக்காவின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் நகரில் நீண்ட வரிசையில் மக்கள்… வெளியான ட்ரோன் காட்சிகள்…!!!!

உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் மனிதாபிமான உதவிகள் பெறுவதற்காக மக்கள் நீண்ட தூரம் வரிசையில் நிற்கும் ட்ரோன் காட்சிகள் வெளியாகி இருக்கிறது. இந்த நகரில் ரஷ்யாவின் தாக்குதல் நடைபெறுவதற்கு முன் நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்திருக்கின்றனர். ஆனால் தற்போது இந்த நகரம் முற்றிலுமாக அழிந்து போன நிலையில் இருக்கிறது. மேலும்  அங்கு வசிக்கும் மக்கள் உணவு, இருப்பிடம் குடிநீர் போன்ற எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் சிரமப்படுகின்றனர். அந்த நகரிலிருந்து வாகனங்கள் மூலம் வெளியேறும் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யப்படைகளால் கடத்தி கொல்லப்பட்ட மேயர்…. இறுதியாக மக்களுக்கு தெரிவித்த தகவல்…!!!

உக்ரைனில் ஒரு பெண் மேயரை, ரஷ்ய படைகள் கடத்திக் கொலை செய்த நிலையில் கடைசியாக அவர் கிராம மக்களுக்கு தெரிவித்த தகவல் வெளியாகியிருக்கிறது. உக்ரைன் நாட்டின் Olga Sukhenko என்ற மேயரை ரஷ்ய படைகள் கடத்திச்சென்று கொலை செய்தனர். அதன்பிறகு, அவரின் உடலை, அவரது கணவர் மற்றும் மகன் சடலங்களுடன் ஒரு பள்ளத்தில் கண்டறிந்துள்ளார்கள். ரஷ்ய படையினர் Olga Sukhenko-ஐ அவரின் வீட்டிலிருந்து  குடும்பத்தினருடன் கடத்தி சென்று கொலை செய்து வனப்பகுதியில் இருக்கும் ஒரு பள்ளத்தில் சடலத்தை […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் ரஷ்யப்படைகள் செய்த அட்டூழியம்… அதிபரின் சூழ்ச்சி….வெளிவந்த பின்னணி…!!!

ரஷ்யா, உக்ரைன் நாட்டில் மேற்கொள்ளும் போர்க்குற்றங்களின் ஆதாரங்களை அழிக்க சூழ்ச்சி  செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் உள்ள Bucha நகரத்தில் ரஷ்ய படையினர் மக்களை கண்மூடித்தனமாக தாக்கி கொலை செய்திருக்கிறார்கள். மேலும், வயது வரம்பின்றி பெண்களை, அவர்களது குடும்பத்தார் முன்னிலையிலேயே பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். உயிரிழந்தவர்களின் சடலத்தில் வெடிகுண்டுகளை கட்டி, குழிகளில் தூக்கி வீசியிருக்கிறார்கள். மேலும், பல கொடூர செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். ரஷ்யா இதற்கு பதில் அளித்தே தீரவேண்டும் என பல நாடுகள் வலியுறுத்தி வருகிறது. எனவே, […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கான எங்களின் முழு ஆதரவு தொடரும்…!! வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் பேச்சு…!!

ரஷ்ய படையெடுப்பில் இருந்து மீளும் வரை உக்ரைனுக்கு எங்களுடைய முழு ஆதரவையும் தருவோம் என அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, ராணுவம், பொருளாதாரம், மனிதாபிமானம் என அனைத்து வழிகளிலும் நாங்கள் உக்ரைனுக்கு உதவி செய்வோம். உக்ரைனுடனான எங்களின் வரலாற்று ஆதரவு நிச்சயம் தொடரும். இந்தப் போரில் இருந்து மீள்வதற்கு சிறிது காலம் எடுக்கும் அதுவரை உக்ரைனின் ஒரு பகுதியாக அமெரிக்கா விளங்கும். உக்ரைனை எதிர்க்க திட்டமிட்டிருக்கும் ரஷ்யாவின் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன்: குழந்தைகள் கண்ணெதிரே தாய்மார்களுக்கு நடந்த கொடூரம்…. வெளியான அதிர்ச்சி தகவல்……!!!!!

உக்ரைனில் குழந்தைகள் கண்முன்னே தாயார்கள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகிறார்கள் என்ற தகவலை நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி முதன் முறையாக வெளியிட்டுள்ளார். உக்ரைனில்-ரஷ்யா இடையிலான போர் நீடித்து வரும் நிலையில், புச்சா நகரில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களை ரஷ்ய ராணுவம் சித்திரவதை செய்து கொலை செய்து உள்ளதாக பல குற்றசாட்டுகளை உலகநாடுகள் முன்வைத்து வருகிறது. ரஷ்யபடையினரால் உக்ரைன் பெண்கள், சிறுமிகள் சீரழிக்கப்படுகிறார்கள் என்ற தகவலும் வரும் சூழலில், அது தொடர்பாக அதிபர் ஜெலன்ஸ்கி இதுவரை பேசாமல் இருந்தார். இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போரில் மாயமான சிறுவன்…. சடலமாக மீட்பு…. தாயார் உருக்கம்…!!!

உக்ரைன் நாட்டில் தேடப்பட்டு வந்த 4 வயதுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதியன்று ரஷ்ய படைகள் போர் தொடுக்க தொடங்கியது முதல் தற்போது வரை மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். பலர் தங்கள் குடும்பத்தினரையும் உறவினர்களையும் இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் கீவில் இருக்கும் ஒரு கிராமத்தை சேர்ந்த Sasha என்ற 4 வயதுடைய சிறுவன் கடந்த மாதம் 10ஆம் தேதி அன்று […]

Categories
உலக செய்திகள்

1.1 கோடி பேர் வீடுகளை விட்டு தஞ்சம்… ஐ.நா அகதிகள் நல அமைப்பு… வெளியிட்டுள்ள அறிக்கை…!!!!

உக்ரைனில் இருந்து அகதிகளாக 1.1 கோடி பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐநா அகதிகள் நல்ல அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற உக்ரைனில் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான பகுதிகளை நோக்கி 1.1 கோடி பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐநா அகதிகள் நல அமைப்பு கூறியுள்ளது. இதுதொடர்பாக மூன்று வாரங்களுக்கு பிறகு முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், வீடுகளை விட்டு வெளியேறியவர்களில் 75 லட்சம் பேர் உக்ரைன் உள்ளேயே உள்நாட்டு அகதிகளாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. மீதமுள்ள  40 லட்சத்திற்கும் […]

Categories
உலகசெய்திகள்

இவங்க அணுகுண்டு பயன்படுத்த வாய்ப்பு இருக்கா….? ரஷ்யா வெளியிட்ட பதில்… வெளியான தகவல்…!!!!!

உக்ரைன் போரில் அணுகுண்டு பயன்படுத்த வாய்ப்பிருப்பதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் போரில் ரஷ்ய அணுகுண்டை கையில் எடுக்கக் கூடும் என ஊகங்கள் நிலவி வருகிறது. ஆனால் இதற்கான வாய்ப்புகள் இல்லை என ரஷ்யா அதனை நிராகரித்து இருக்கிறது. இது பற்றி ஐநா ஆயுத குறைப்பு ஆணையக் கூட்டத்தில் ஐநா சபைக்கான ரஷ்யாவின் முதல் துணை பிரதிநிதி டிமிட்ரி பாலியன்ஸ்கி பேசும்போது கருத்து தெரிவித்துள்ளார். அப்போது அவர் “ஊகங்களுக்கு மாறாக ரஷ்யாவின் அணு சக்தி திறனை பயன்படுத்துவது, […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் புச்சா படுகொலை…. கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா…..!!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. சென்ற ஒரு மாதத்தைக் கடந்தும் ரஷ்ய படைகளின் தாக்குதல் நீடித்து வரும் நிலையில், உக்ரைனின் முக்கியமான நகரங்களை கைப்பற்றவில்லை. அதிலும் குறிப்பாக தலைநகர் கீவ், கார்கிவ் போன்ற நகரங்களைக் கைப்பற்ற ரஷ்ய ராணுவம் கடுமையாக தாக்குதல்களை மேற்கொண்டது. எனினும் ரஷ்ய தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனிடையே உக்ரைனின் புச்சா நகரிலுள்ள ஒரு வெகுஜன புதைக்குழியில் ஏறத்தாழ 300 நபர்கள் புதைக்கப்பட்டதாகவும், அந்நகரம் முழுதும் […]

Categories
உலகசெய்திகள்

ஐந்தறிவு ஜீவனின் பாசம்…. ரஷ்ய ராணுவத்தால் உயிரிழந்த எஜமான்…. காவலுக்கு காத்திருந்த நாய்….!!

உக்ரைனில் ரஷ்ய படை வீரர்களால் கொல்லப்பட்ட தனது எஜமானருக்கு அருகே நாய் ஒன்று படுத்திருக்கும் புகைப்படம் காண்போர் மனதை உருகுலைய வைத்துள்ளது. உக்ரேனுக்கும், ரஷ்ய ராணுவத்துக்குமிடையே ஒரு மாத காலத்திற்கும் மேலாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதில் அதீத பலம் வாய்ந்த ரஷ்யா உக்ரேனின் பல பகுதிகளில் குண்டு மழை பொழிந்து வருகிறது. இவ்வாறு இருக்க சமீபத்தில் ரஷ்யப் படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்விக்கு அருகேயிருக்கும் புச்சா, இர்பின் ஆகிய பகுதிகளிலிருந்து வெளியேறியுள்ளது. அவ்வாறு ரஷ்ய […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் பெண் தலைவர் குடும்பத்துடன் கொலை…!!! தொடரும் ரஷ்யாவின் அட்டூழியம்…!!

உக்ரைன் நாட்டில் தொடர்ந்து ஒரு மாதத்தை தாண்டியும் போர் நடைபெற்று வரும் நிலையில உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்ய படைகள் கைப்பற்றி விட்டனர். அந்த வரிசையில் உக்ரைனின் மாட்டிசின் பகுதியை கைப்பற்றிய ரஷ்ய வீரர்கள் அப்பகுதியில் உள்ள பெண் தலைவர்களின் குடும்பத்தினரை கொலை செய்து புதைத்து விட்டதாக ஒரு பெரும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மாட்டிசிம் பகுதியிலுள்ள ஒரு பெண் தலைவரின் கணவர் மற்றும் குழந்தைகளை சித்திரவதை செய்து பின்னர் அவர்களை கொன்று டிராக்டரால் ஒரு […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனின் தொடரும் அத்துமீறல்கள்…!! பார்வையிடச் செல்லும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்…!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஒரு மாதங்களை கடந்த நிலையில் உக்ரைன் மக்கள் பெரிய அளவில் பாதிப்புகளை சந்தித்துள்ளனர். உக்ரைன் நாடு முழுவதையும் கைப்பற்றுவதை ரஷ்யா திட்டமாக கொண்டு உள்ளது. ஏற்கனவே தலைநகர் கீவ் பகுதியை கைப்பற்றிய ரஷ்ய ராணுவம் அங்கு ஏராளமான அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்றதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த பகுதியில் இருந்து 400 க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உக்ரைன் மக்களை ரஷ்யா இனப்படுகொலை செய்கிறது என உக்ரைன் அதிபர் குற்றம்சாட்டியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

ஆதாரங்களை மறைக்க முயல்கிறார்கள்…. ரஷ்யாவை குற்றம் சாட்டும் உக்ரைன் அதிபர்…!!!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி புச்சா மற்றும் ஒரு சில நகரங்களில் நடந்த கலவரங்களின் ஆதாரங்களை ரஷ்யா மறைக்க முயல்வதாக கூறியிருக்கிறார். உக்ரைன் அதிபரான ஜெலன்ஸ்கி, ரஷ்யா குறித்து தெரிவித்திருப்பதாவது, புச்சா நகரில் 300க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால் மொத்த நகரத்தையும் கணக்கெடுத்தால் பலி எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும். ரஷ்யா, புச்சா மற்றும் சில நகரங்களில் நடந்த கலவரங்களில் இருக்கும் ஆதாரங்களை மறைக்க முயல்கிறது. அவர்கள் உண்மைகளை மறைக்க முயல்கிறார்கள். எனினும் அவர்களால், வெற்றி பெற […]

Categories
உலகசெய்திகள்

1முதல்2% எரிசக்தியை இந்தியா இறக்குமதி செய்கிறது… வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் கருத்து…!!!!!

ரஷியாவிடமிருந்து 1 முதல் 2 சதவீதம் மட்டுமே எரிசக்தியை இந்தியா இறக்குமதி செய்வதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி கூறியுள்ளார்.  இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவிகிதம் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் 1.3 சதவீதம் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலில் ரஷ்யா மீது அமெரிக்கா இதர மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதன் காரணமாக இந்தியா மற்றும் பெரிய இறக்குமதி அவர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் பெற்ற குழந்தைகள் உடலில் பெற்றோர் எழுதும் தகவல்கள்…. மனதை உருக்கும் புகைப்படம்…..!!!!!

ரஷ்ய தாக்குதலில் தாங்கள் இறந்துவிட்டால் குழந்தைகளை உறவினர்களிடம் ஒப்படைக்க வசதியாக இருக்க அவர்கள் முதுகில் குடும்பதகவல்களை உக்ரைனிய பெற்றோர் எழுதி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி மனதை உருக்கியுள்ளது. இத்தகவலை உக்ரைனிய பெண் பத்திரிக்கையாளர் தன் டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் Vira என்ற சிறுமியின் முதுகில் அவரின் பிறந்த தேதி எழுதப்பட்டு இருக்கிறது. மேலும் சில எண்களும் எழுதப்பட்டுள்ளது. Viraவின் தாய் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது, எங்களுக்கு போர் காரணமாக எதாவது […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன்: பொதுமக்களை கொடூரமாக கொன்று குவித்த ரஷ்யா…. சரியான பதிலடி கொடுத்த ஜெர்மனி…..!!!!!

உக்ரைன் தலைநகர் கீவைச் சுற்றியுள்ள நகரங்களிலிருந்து ரஷ்ய துருப்புக்கள் பின்வாங்கிய பின், அப்பகுதிகளில் 410 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 300 பேர் புச்சா நகரத்தில் மட்டும் கொலை செய்யாப்பட்டுள்ளதாகவும் உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அந்த நகரில் நேற்று 57உடல்கள் உடைய பாரிய புதைகுழி கண்டெடுக்கப்பட்டது. அங்கு உயிரிழந்தவர்களில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களும், துன்புறுத்தி கொலை செய்யப்பட்ட குழந்தைகளும் அடங்குவர் என உக்ரைன் தெரிவித்தது. ரஷ்யபடை வீரர்களின் இந்த கொடூர செயலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய படையை காலி செய்ய…. போராட்டக் களத்தில் இறங்கிய பெண் ஸ்னைப்பர்…..!!!!!

ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஸ்னைப்பர் ஒருவரை அவரது சக ரஷ்ய வீரர்கள் கைவிட்டுச் சென்ற விடயம் நினைவு இருக்கலாம். பலத்த காயமடைந்த நிலையில் உக்ரைன் வீரர்களிடம் சிக்கிய Irina Starikova (41) என்ற அந்த பெண் ஸ்னைப்பர் இப்போது எப்படியிருக்கிறார் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் அவருக்குப் போட்டியாக உக்ரைன் தரப்பில் களமிறங்கி இருகிறார் ஒரு பெண் ஸ்னைப்பர். “Charcoal” என்ற புனைபெயரில் அழைக்கப்படும் அப்பெண் 2017 ஆம் வருடம் டான்பாஸ் பகுதியில் ரஷ்ய பிரிவினைவாதிகளுக்கு எதிராக […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய நாட்டிடம் எரிபொருள் வாங்குவதை நிறுத்த மாட்டோம்…. -ஜெர்மன் அரசு…!!!

ஜெர்மன் அரசு, ரஷ்ய நாட்டிடமிருந்து எரிபொருள் வாங்குவதை இப்போது நிறுத்த முடியாது என்று கூறியிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 41-ஆம் நாளாக தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு உக்ரைன் படைகளும் தகுந்த பதிலடி கொடுக்கிறது. எனினும் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. மேலும்  ஆயுத உதவிகளும் செய்து வருகின்றன. மேலும் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடைகளை அறிவித்தன. எனவே, ரஷ்ய அரசு தங்களிடம் […]

Categories
உலகசெய்திகள்

ரஷ்யா இனபடுகொலை நிகழ்த்தியிருக்கிறது…. குற்றம் சாட்டும் பிரபல நாட்டு அதிபர்…!!!!!

புச்சாவில்  ரஷ்யப் படைகள் படுகொலை நடத்தியதாக உக்ரைன்  குற்றம்சாட்டி இருக்கின்ற நிலையில் ரஷ்யா அந்தக் குற்றச்சாட்டுகளை ஏற்க மறுத்துள்ளது. உக்ரைனில் ரஷ்யா இனப்படுகொலை நிகழ்த்தியதாகவும் ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தை என்பது கடினமான ஒன்றாகும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை ஒரு மாதத்தை கடந்த நிலையில் உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் தலைநகர் கீவ் அருகே உள்ள புச்சா நகரத்தில் புதைகுழியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட […]

Categories
உலக செய்திகள்

அனைவரும் உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்….!!! உக்ரைன் அதிபர் உருக்கமான பேட்டி…!!!

அமெரிக்காவில் நடைபெற்ற கிராமி விருது வழங்கும் விழாவின் நடுவே உக்ரைன் அதிபர் அனைவரும் தங்களால் இயன்ற உதவியை உக்ரைனுக்கு செய்யுங்கள் எனக் கூறும் வீடியோ ஒளிபரப்பாகி உள்ளது. சர்வதேச அளவில் இசை துறையில் சாதித்த சிறந்த இசைக் கலைஞர்களுக்கு அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் கிராமி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஏ.ஆர்.ரகுமான் உட்பட பல்வேறு இசைக் கலைஞர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின்போது ஒளிபரப்பப்பட்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு அங்கிருந்தவர்களை இறுக்கமடையச் செய்தது. அதில் […]

Categories
உலக செய்திகள்

போர் விமானங்களை ஒப்படைத்து சரணடையும் ரஷ்ய வீரர்களுக்கு வெகுமதி….!!! உக்ரைன் அதிரடி அறிவிப்பு….!!

உக்ரைன் நாட்டின் டாங்கிகள் மற்றும் போர் விமானங்களை ஒப்படைக்கும் ரஷ்ய வீரர்களுக்கு 75 லட்சம் முதல் ஏழரை கோடி வரை வெகுமதி வழங்கப்படும் என உக்ரைன் அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக உக்ரைன் நாட்டின் சபாநாயகர் கோர்நியன்கோ நாடாளுமன்றத்தில் உக்ரைன் அரசிடம் சரணடையும் ரஷ்ய வீரர்கள் தங்களுடைய பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ள நினைத்தால் அதற்கு அரசாங்கம் முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என கூறியுள்ளார். அதன்படி போர் கப்பல் அல்லது போர் விமானத்தை ஒப்படைக்கும் ரஷ்ய வீரருக்கு […]

Categories
உலக செய்திகள்

தொடரும் ரஷ்யாவின் அட்டூழியம்…!! வெளியான செயற்கைக்கோள் புகைப்படம்….!!

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கி 5 வாரங்களாக போர் நடைபெற்று வரும் நிலையில் ரஷ்யா தனது படைகளை டான்பாஸ் நகரை நோக்கி நகர்த்தி உள்ளது. இந்நிலையில் உக்ரைனின் முக்கிய நகரமான புச்சாவில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் அங்கும் இங்குமாக சிதறி கிடக்கும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து புகார் நகரத்தின் துணைமேயர் தாராஸ் ஷப்ரவ்ஸ்கி வெளியிட்ட அறிக்கையில், புச்சா நகரின் சாலையில் 300க்கும் மேற்பட்ட மனித உடல்கள் அங்குமிங்கும் சிதறி கிடப்பதாகவும், […]

Categories
உலக செய்திகள்

ஏவுகணை தாக்குதல் நடத்திய உக்ரைன் படைகள்…. ரஷ்ய போர்க்கப்பல் அழிப்பு…!!!

உக்ரைன் படைகளின் ஏவுகணை, ரஷ்யாவின் போர்க்கப்பல் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய படைகள், உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 40-ஆம் நாளாக போர் தொடுத்து வருகிறது.  இதில் உக்ரைனின் Odesa என்ற துறைமுக நகரின் மீது தீவிரமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்நகர் மீது தாக்குதல் மேற்கொண்ட Admiral Essen என்ற ரஷ்யாவின்  போர்க்கப்பல் மீது உக்ரேன் படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த கப்பலில் இருந்த ரஷ்ய படைகளின் நிலை […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யா இனப் படுகொலை செய்கிறது…!!” உக்ரைன் அதிபர் பகிரங்க குற்றச்சாட்டு…!!

உக்ரைனின் கீவ் நகர புதைகுழிகளில் இருந்து 400 க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ரஷ்ய ராணுவ வீரர்கள் உக்ரைன் மக்களை கொடூரமான முறையில் கொலை செய்து குழிகளில் புதைத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உக்ரைன் அதிபர் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, உக்ரைன் நகரில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இனத்தை சேர்ந்த மக்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அளிக்கப்பட்டு வருகின்றனர். ரஷ்யாவின் கொள்கைக்கு நாங்கள் உடன்படாத ஒரே காரணத்திற்காக அவர்கள் தங்களுடைய பெரும்பான்மையை நிரூபிப்பதாக கூறி […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் பயங்கரம்…. வீட்டை நோக்கி வந்த குண்டு…. அதன் பின் நேர்ந்த கொடூரம்…!!!

உக்ரைன் நாட்டில் ரஷ்யப்படைகள் வீசிய வெடிகுண்டில் இரண்டு சிறுவர்களும் அவர்களின் தாயும் காயமடைந்துள்ளனர். உக்ரைன் நாட்டின் Dnipropetrovsk Oblast என்ற பகுதியைச் சேர்ந்த Olena என்ற பெண், ரஷ்யப்படைகள் வீசியெறிந்த குண்டு தன் வீட்டை நோக்கி வருவதை ஜன்னல் வழியே பார்த்துள்ளார். வீடு வெடித்து சிதற போவதை அறிந்த அவர், உடனடியாக தன் இரட்டை பிள்ளைகளை அழைத்து தனக்கு அடியில் வைத்து மறைத்து கொண்டு கவிழ்ந்திருக்கிறார். அதற்குள் குண்டு வெடித்து, ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறிவிட்டது. அதற்குப் […]

Categories
உலக செய்திகள்

பிளான் B-க்கு மாறிய புடின்…. ரஷ்யாவில் திட்டமிடப்படும் வெற்றி அணிவகுப்பு… வெளியான தகவல்…!!!!

ஏப்ரல் 9ஆம் தேதிக்குள் உக்ரைனின் டான் பாஸ் தொகுதியில் வெற்றியை பெறுவதற்காக படைகள் திசை திருப்பப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைனில் கிட்டத்தட்ட ஐந்து வாரங்களாக ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது தலைநகர் மற்றும் உக்ரைனின் பிற பகுதிகளில் இருந்து பின்வாங்கி கிழக்கு உக்ரைன் பகுதியான டான்பாஸ் பகுதியில் கவனத்தை திசை திருப்பி உள்ளார்கள். ரஷ்ய ராணுவத்தின் இந்த திட்டத்திற்கு இரண்டாம் உலகப் போரில் நாஜிகள் சரணடைந்ததை குறிக்கும் வகையில், ரஷ்யாவின் சிறப்பு சதுக்கத்தில் […]

Categories
உலக செய்திகள்

உச்சகட்ட கொடூரம்….ரஷ்யாவிடம் சிக்கிய உக்ரைன் பெண் வீராங்கனைகள்…. அவமானப் படுத்துவதற்காக என்ன செய்திருக்கிறார்கள் பாருங்கள்….!!!!

இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் போரின் போது அதில் பாதிக்கப்படுபவர்கள் போர்வீரர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் தான். பொதுமக்களை தாக்கக் கூடாது என்றெல்லாம் போர்  விதிகள் இருக்கிறது. ஆனால் இதுவரை நடந்த போர்களில்  பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படாத போர்கள் எத்தனை? அதிலும் குறிப்பாக போர் உருவாகும் போதெல்லாம் அதிகம்  பாதிபபுககுள்ளாவது பெண்கள்தான்.எதிரி நாட்டுப் பெண்களை வன்புணர்ந்து, அந்த நாட்டின் மீதான வன்மையை வெளிப்படுத்துவது போன்ற எந்த விதத்தில் போர்  நீதி? தற்போது ரஷ்யாவும் உக்ரைனில் அதைத்தான் செய்து […]

Categories
உலக செய்திகள்

சுகோய்-சு-35 விமானம்…. சுட்டு வீழ்த்திய உக்ரைன் ராணுவம்…. புகைப்பட காட்சிகள் வெளியீடு……!!!!!!

ரஷ்ய நாட்டின் ஆக்ரோஷமான போர் விமானம் சுகோய்சு-35 உக்ரைன் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது. ரஷ்யா-உக்ரைன் போர் நீடித்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய ராணுவத்திற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் உக்ரைன் ராணுவம் வலுப்பெற்று உள்ளது. சமீபத்திய காட்சிகள் ரஷ்யாவின் beast-attacking aircraft என அழைக்கப்படும் சுகோய்சு 35 போர் விமான Izium நகருக்கு அருகில் உக்ரைன் இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட காட்சிகள் அணுகப்பட்டது. அவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த விமானத்தின் படங்களில் இருந்து சுகோய் சுட்டு வீழ்த்தப்பட்டதையும் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய வீரர்களுக்கு விஷம் கலந்த கேக்….!! உக்ரைன் மக்கள் செஞ்ச வேலைய பாருங்க….!!

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய ராணுவம் போர்தொடுத்து 5 வாரங்கள் கடந்த நிலையில் அங்கு லட்சக்கணக்கில் பொருட் சேதம் மற்றும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் பெரும்பாலான நகரங்கள் முற்றிலுமாக அளிக்கப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள ஒரு சில நகரங்களும் ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில் உக்ரைனின் இசியம் மாகாணத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரஷ்ய ராணுவ வீரர்களை அப்பகுதி மக்கள் விஷம் கலந்த கேக்குகளை கொடுத்து வரவேற்றுள்ளனர். இந்த கேக்குகளை உண்ட ரஷ்ய ராணுவ வீரர்கள் […]

Categories
உலக செய்திகள்

போருக்கு மத்தியில் இன்னிசை கச்சேரி….!! உக்ரைன் மக்களுக்கு சிறிய ஆறுதல்…!!

உக்ரைன் நாட்டில் உள்ள ஒடிஸா நகரில் ரஷ்ய படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஏவுகணை தாக்குதல் காரணமாக அந்த நகரம் முழுவதும் சீர்குலைந்து காணப்படுகிறது. இந்நிலையில் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் நின்றபடி இசைக் கலைஞர்களின் இசை கச்சேரியை நடத்தியுள்ளனர். உக்ரைனின் ஒடிசா நகரில் துறைமுகத்திற்கு அருகே அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் 3 எண்ணெய் கிடங்குகளை ரஷ்ய ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி அழித்துள்ளது. போர் மற்றும் அசாதாரணமான இந்த சூழ்நிலையில் மக்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா ஆக்கிரமித்த பகுதியை மீட்ட உக்ரைன்…. அணுமின் நிலையத்தில் கொடி ஏந்தி நின்ற வீரர்…!!!

செர்னோபிலில் உக்ரைன் நாட்டின் ஒரு ராணுவ வீரர், கொடி ஏந்தி கொண்டு நின்ற புகைப்படம் வெளியாகியிருக்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் போரை தொடங்கிய போது, ஆக்கிரமித்த ப்ரிபியாட் பகுதியை உக்ரைன் மீண்டும் கைப்பற்றி விட்டது. இதனை அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். கடந்த வாரத்தின் கடைசியில் ரஷ்ய வீரர்கள் செர்னோபில் அணுமின் நிலையத்திலிருந்து வெளியேறி விட்டதாக உக்ரைன் தெரிவித்தது. கடும் இழப்பாலும், கதிர்வீச்சு பாதிப்பாலும், படைகள் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது. ரஷ்யப்படை பின்வாங்கியது, உக்ரைனின் முக்கியமான வெற்றி என்று […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி…. சுவிட்சர்லாந்தில் அதிகரித்த விலைவாசி…!!!

சுவிட்சர்லாந்தில் சமீப நாட்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. சுவிட்சர்லாந்தில் கடந்த 2020-ம் வருட தொடக்கத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து ஏற்பட்ட நிலையற்ற தன்மையை தொடர்ந்து பொருளாதாரத்தில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், பணவீக்கமும் உண்டானது. இது மட்டுமன்றி ரஷ்யா, உக்ரைன் நாட்டில் ஊடுருவிய காரணத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்தது. எனவே, மீண்டும் பணவீக்கம் அதிகரித்து தற்போது பொருட்களை விலை வெகுவாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு மற்றும் வெப்பம் உண்டாக்குவதற்கு  பயன்படுத்தப்படும் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன்: ரோடு முழுவதும் எரிந்த நிலையில் கிடந்த சடலங்கள்…. வெளியான பகீர் தகவல்…..!!!!!

உக்ரைனின் புச்சா நகரமானது தலைநகர் கீவ்வை கைப்பற்றும் ரஷ்யாவின் கனவுகளுக்கு கல்லறையாக அமைந்ததாக அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்து இருக்கிறார். தலைநகர் கீவ்வை கைப்பற்றும் நோக்கத்தில் ரஷ்ய துருப்புகள் புச்சா நகரை மிகவும் சேதமாக்கியுள்ளது. சென்ற பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்ய துருப்புகள் உக்ரைனுக்குள் புச்சா வழியே புகுந்துள்ளது. இதற்கு பதிலடியாக உக்ரைன் துருப்புகள் ரஷ்ய ராணுவ டாங்கிகள் அணிவகுப்பை மொத்தமாக சிதைத்துவிட்டது. இதன் காரணமாகவே கீவ் நகரை கைப்பற்றும் ரஷ்யாவின் திட்டம் பாலாகிவிட்டது. இந்நிலையில் புச்சா நகரிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. மக்களை காப்பாற்ற முயன்ற… துணை பிரதமரின் கணவர் கொலை…!!!

ரஷ்யா, உக்ரைனில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் உக்ரைன் நாட்டின் துணை பிரதமரின்  கணவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் துணைப் பிரதமரான Olga Stefanyshyna என்பவரின் கணவர் Bogdan போரில் உயிரிழந்து உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இது பற்றி Lesia Vasylenko என்ற எம்.பி தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, 36 நாட்களாக நடக்கும் சின்ஹட்ட போரில் முன்பு இல்லாத வகையில் நேற்று அதிகம் அழுதேன். Yesterday I cried more than in all the other 36 […]

Categories
உலக செய்திகள்

இதுதான் ரஷ்யாவின் அடுத்த பிளான்…. உக்ரைன் அதிபர் வெளியிட்ட தகவல்…..!!!!!

ரஷ்யாவின் அடுத்தகுறி தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியுள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24ம் தேதி முதல் ரஷ்ய படையினர் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் உக்ரைன் ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனிடையில் போரை முடிவுக்கு கொண்டுவர இருநாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சில தகவல்களை வெளியிட்டு இருக்கிறார். அதாவது உக்ரைன் நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளைக் […]

Categories
உலக செய்திகள்

கடைகள், வணிகங்கள்…. உக்ரைனில் மீண்டும் திறந்தாச்சு…. வெளியான தகவல்…..!!!!!

உக்ரைனின் Brovary நகரில் கடைகள் மற்றும் வணிகங்கள் மீண்டும் திறக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தலைநகர் கீவிலிருந்து கிழக்கே 12 மைல் தொலைவிலுள்ள Brovary நகரை மீண்டும் கைப்பற்றி இருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் அறித்ததை அடுத்து, அங்கு கடைகள், வணிகங்கள் திறக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தொலைக்காட்சியில் உரையாற்றிய Brovary நகர மேயர், Brovary மாவட்டத்தில் இருந்து ரஷ்யபடைகள் வெளியேறி விட்டனர். இப்போது மீத உள்ள ரஷ்ய வீரர்கள் ராணுவ உபகரணங்கள் மற்றும் குறிப்பாக கண்ணி வெடிகளை உக்ரைனிய […]

Categories
உலக செய்திகள்

ஆழம் தெரியாம காலை விட்ட ரஷ்யா…. ஆயுதங்கள் இன்றி தவிப்பு…. லீக்கான தகவல்…..!!!!!

உக்ரை நாட்டிற்கும் நுழைந்த ரஷ்யா, உக்ரைனிடம் இதுவரையிலும் 142 விமானங்கள், 131 ஹெலிகொப்டர்கள் மற்றும் 625 tankகளை இழந்துள்ளது. தற்போது ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ள அடுத்த பிரச்சினை என்னவெனில் அதனிடம் ஆயுதங்கள் காலியாகி வருகிறது. இதில் ரஷ்யாவின் சில ஹெலிகொப்டர்கள், ஜெட் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் உக்ரைனால் தயாரிக்கப்பட்டவை (அல்லது) உக்ரைனில் தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்களால் உருவாக்கப்பட்டவை ஆகும். இத்தகவலை பிரித்தானிய பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த ஒருவர் நேற்றிரவு வெளியிட்டுள்ளார். ரஷ்யா பயன்படுத்தும் ஆயுதங்களின் பெரும் அளவிலான பாகங்கள் உக்ரைனால் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் ஏவுகணை தாக்குதல்….!! ஆதாரத்துடன் நிரூபித்த உக்ரைன் அரசு….!!

உக்ரைனின் மிக முக்கியமான துறைமுக நகரமான Odesa மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று Odesa நகரின் மீது ரஷ்ய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களை அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. மேலும் நகரின் முக்கியமான உள்கட்டமைப்பின் மீதும் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக வெளியுறவு துறை அதிகாரி கூறியுள்ளார். இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை எனவும் […]

Categories
உலக செய்திகள்

நெத்தியடி கொடுத்த உக்ரைன்…!! ஆயுத பற்றாகுறை….!! திணறி வரும் ரஷ்ய ராணுவம்…!!

ரஷ்யாவுக்கு தேவையான பெரும்பாலான ராணுவ ஆயுதங்களை உக்ரைன் தான் தயார் செய்து கொடுத்து வந்த நிலையில், உக்ரைன் ரஷ்ய போர் காரணமாக தற்போது உக்ரைனில் இருந்து ஆயுதங்கள் அனுப்பப்படாததால் ரஷ்ய வீரர்கள் திணறி வருவதாக தெரியவந்துள்ளது. உக்ரைன் வீரர்கள் துணிச்சலோடு செயல்பட்டு ரஷ்ய வீரர்களை தலைநகரிலிருந்து வெளியேற்றி விட்டனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன் மீதான ரஷ்ய போர் தொடங்கிய நாள் முதல் இதுவரை 143 விமானங்கள், 131 ஹெலிகொப்டர்கள், 625 டாங்கிகள், 316 […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் தொடரும் அவலம்….!! 300 உடல்கள் ஒரே இடத்தில் புதைப்பு….!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஒரு மாதங்களை கடந்த நிலையில் இந்தப் போரின் விளைவால் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளனர். அந்த வகையில் உக்ரைனின் புச்சா நகரில் 280 பேரின் உடல்களை ஒரே இடத்தில் புதைத்து உள்ளதாக அந்த பகுதியின் மேயர் அனடோலி பெடோருக் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, “புச்சா நகரின் தெருக்களில் ஒரே இடத்தில் குவியலாக 20 ஆண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் தலையின் பின்புறத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு பலியானவர்கள். […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனிலிருந்து போலந்து சென்ற மக்கள்…. உறவினர்களை கட்டியணைத்து ஆனந்த கண்ணீர்…!!!

உக்ரைன் நாட்டிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேறி ரயில் வழியாக போலந்து நாட்டின் எல்லை பகுதியை அடைந்துள்ளனர். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து போர் தொடுத்து வருவதால் அந்நாட்டு மக்கள் பக்கத்து நாடுகளில் தஞ்சமடைந்து வருகிறார்கள். அதன்படி அந்நாட்டு மக்கள் தங்கள் உடமைகளை சுமந்து கொண்டு போலந்து நாட்டின் எல்லைப் பகுதியை அடைந்துள்ளனர். அங்கு எல்லை அதிகாரிகள், அவர்களை வழிநடத்திச் சென்று அவர்களின் குடும்பத்தாருடன் சேர்த்து வைத்திருக்கிறார்கள். தங்கள் உறவினர்களை பார்த்தவுடன் அந்த மக்கள் ஆனந்தக் கண்ணீர் […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர் பதற்றம்!…. பொருளாதார சரிவை சந்திக்கும் உக்ரைன்…. நடக்கப்போவது என்ன?…..!!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்ரோஷமான போர் ஒரு மாதம் காலத்தை கடந்து நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவான அனைத்து நடவடிக்கைகளிலும் அமெரிக்கா, ஐரோப்பியா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளது. அதன்படி ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் ரஷ்ய பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்தாலும், மறுமுனையில் உக்ரைனின் பொருளாதாரம் வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என சர்வதேச நாணய நிதியம் (ஐ எம் எப்) எச்சரித்துள்ளது . உக்ரைனின் பொருளாதாரம் இந்த வருடம் தொடக்கத்தின் முதல் கால்பங்கு […]

Categories

Tech |