உக்ரைனிய கடவுச் சீட்டு வைத்து இருக்கும் மக்கள் ரஷ்யாவில் குடியேறவும் காலவரை இன்றி வேலை செய்யவும் அனுமதிக்கும் அரசாணைக்கு விளாடிமிர்புடின் கையெழுத்திட்டு இருக்கிறார். இது புது தொடக்கம் என குறிப்பிட்டுள்ள விளாடிமிர்புடின், உக்ரைனிய மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் முயற்சி இது எனவும் தெரிவித்துள்ளார். இதுவரையிலும் உக்ரைனியர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள 180 தினங்களுக்குள் அதிகபட்சமாக 90 நாட்கள் மட்டுமே ரஷ்யாவில் தங்கமுடியும். நீண்டகாலம் தங்க (அல்லது) வேலை செய்ய ஒருவர் சிறப்பு அங்கீகாரம் அல்லது பணி அனுமதி பெற வேண்டும். […]
