மரியுபோல் நகரத்தில் கொன்று குவித்த ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் சடலங்களை தோண்டியெடுத்து ரஷ்ய துருப்புகள் எரியூட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளன. உக்ரைன் நாட்டில் மரியுபோல் நகரத்தில் கொன்று குவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் சடலங்களை தோண்டி எடுத்து ரஷ்யர்கள் எரியூட்டுவதாக பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் புச்சா மற்றும் கீவ் நகரங்களில் இருந்து ரஷ்ய துருப்புகள் பின் வாங்கிய பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட அட்டூழியங்களை போன்று மரியுபோல் பகுதியிலும் அம்பலப்படாமல் இருக்க ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ரஷ்ய ராணுவம் ஈடுபட்டு […]
