உகாண்டா அரசு, மக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பட்டாசு வெடிக்க தடை விதித்திருக்கிறது. உகாண்டாவில் வருடந்தோறும் பட்டாசு வெடித்து புத்தாண்டை மக்கள் கொண்டாடுவது பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வருடம் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடிக்க தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால், அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக பட்டாசு வெடிக்க தடை அறிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அங்கு கொரோனா தொற்றை தடுக்க இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. […]
