பிரபல நாட்டிற்கு இந்தியா எரிபொருள் விநியோகம் செய்துள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுவதால், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற எரிபொருள்களின் விலை உயர்ந்ததோடு, அத்தியாவசிய பொருள்களின் விலையும் அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி எரிபொருள் மற்றும் உணவு போன்ற அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்த நிதி நெருக்கடியின் காரணமாக அத்தியாவசிய பொருட்களை விலை கொடுத்து வாங்க முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கைக்கு பல நாடுகள் உதவி கரம் நீட்டி வருகிறது. […]
