சிவகாசி மாநகராட்சியில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் வாக்கு சேகரிக்கும் பிரச்சார கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, “எடப்பாடி பழனிச்சாமி, தனது ஆட்சிக்காலத்தில் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். சிவகாசிக்கு பல கோடி மதிப்பில் திட்டங்களை செயல்படுத்தி நிதி ஒதுக்கியவர் ஈ.பி.எஸ். குறிப்பாக பட்டாசு […]
