கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியைச் சேர்ந்த அரசு சிவில் ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டில் அமைச்சர் கே.எஸ் ஈஸ்வரப்பா அரசு ஒப்பந்தங்களை பெறுவதற்கு 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி சந்தோஷ் பாட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவர் தன்னுடைய மரணத்திற்கு கே.எஸ். ஈஸ்வரப்பா தான் காரணம் என கடிதம் ஒன்றினை எழுதி வைத்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அமைச்சர் கே.எஸ் ஈஸ்வரப்பா மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் […]
