சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள தலைமை போக்குவரத்து கழக அலுவலகத்தில் தீரன் தொழிற்சங்க பேரவையை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் திறந்துவைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடைபெறும் ஐடி ரெய்டு எந்தவித அரசியல் காழ்ப்புணர்ச்சியோ, பழிவாங்கும் நடவடிக்கையோ இல்லை என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் அதிமுகவை அழித்துவிட்டு எதிர்க் கட்சியாக பாஜக செயல்பட நினைக்கிறார். இது அண்ணாமலையை […]
