ஈஷா ஆரோக்கிய அலை அமைப்பு சார்பில் இம்மாதம் தொண்டாமுத்தூர் மற்றும் தேவராயபுரம் ஆகிய கிராமங்களில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. கிராமப்புற ஏழை மக்களுக்கு தரமான மருத்துவ சேவை அளிக்கும் நோக்கத்தில் ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் ஆரோக்கிய அலை அமைப்பானது, முன்னணி மருத்துவமனைகளுடன் இணைந்து பல்வேறு விதமான இலவச மருத்துவ முகாம்களை கோவை மாவட்டத்தில் மாதந்தோறும் நடத்தி வருகிறது. அதன்படி, அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் முத்திபாளையம் நண்பர்கள் பொது நற்பணி மன்றம் ஆகியவற்றுடன் […]
