சிறுத்தை நாயை கடித்து கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள புதுப்பீர்கடவு கிராமத்தில் விவசாயியான செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் மல்லிகைபூ செடி பயிரிட்டு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல பூக்களை பறிப்பதற்காக செல்வம் தோட்டத்திற்கு சென்றபோது தான் வளர்த்து வந்த நாய் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். நாயின் பாதி உடல் மட்டுமே கிடந்ததால் நள்ளிரவு நேரத்தில் […]
