சத்தியமங்கலம் அருகே டெம்போ மீது பைக் மோதிய விபத்தில், தாய் மற்றும் மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்திலிருந்து, கோபி சாலை வழியாக அரிசி லோடு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. மறுபுறம் கோபிசெட்டிபாளையத்திலிருந்து தாளவாடிக்கு தேங்காய் லோடு ஏற்றிக் கொண்டு டெம்போ ஒன்று வந்துகொண்டிருந்தது. இதற்கிடையில் சத்தியமங்கலத்திலிருந்து கட்டட வேலையை முடித்துக்கொண்டு,பைக்கில் சின்னம்மாள் என்ற பெண்ணும், அவரின் மகன் சாமிநாதனும் அரியப்பம்பாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, […]
