சிக்னல் கிடைக்காததால் உயரமான கட்டடத்திற்கு சென்ற வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள எழுமாத்தூரில் தனியார் ஸ்பின்னிங் மில் ஒன்று அமைந்துள்ளது. இந்த மில்லில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிகாஸ்திகா (19) என்ற இளைஞர் தனது உறவினர்களுடன் தங்கி வேலை செய்து வந்தார். வழக்கம்போல் நேற்று மாலையில் பணியை முடித்துவிட்டு பிகாஸ்திகா வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது தனது உறவினர் ராஜேஷ் ஓரம் என்பவருடன் பிகாஸ்திகா வீட்டிற்குள் இருந்து செல் போனில் ஃப்ரீ […]
