அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் மீது பொய் வழக்குப் போடுவதாக போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அறச்சலூர் இலங்கை அகதிகள் முகாமில் 160 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த முகாமை சேர்ந்த 3 பேர் கஞ்சா வைத்திருப்பதாக கூறி காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். இந்நிலையில் காவல்துறையினர் இந்த முகாமைச் சேர்ந்தவர்கள் மீது பொய்வழக்கு போடுவதாக கூறி கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அங்கு வசிப்பவர்கள் உள்ளிருப்பு போராட்டம் […]
