வாலிபர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள ஈங்கூர் மேம்பாலத்தின் கீழ் ஒரு கும்பல் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுடன் இருந்த வாலிபர் ஒருவரை கும்பலில் இருந்த மற்றவர்கள் ஒன்று சேர்ந்து கல்லால் அடித்து தாக்கியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதனையடுத்து கல்லால் அடிபட்டு உயிருக்குப் […]
