உரக்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை கவுண்டன்புதூரில் செல்லமுத்து என்பவர் வசித்து வந்தார். இவர் தோப்பூர் பகுதியில் உரக்கடை ஒன்று நடத்தி வந்தாராம். இவருக்கு சங்கீதா என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதியினருக்கு மகிலன் என்ற மகனும், நிகாசினி என்ற மகளும் இருக்கின்றனர். இதில் செல்லமுத்து தன்னுடைய தொழிலுக்காக பல பேரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் செல்லமுத்துவால் கடனை மீண்டும் திருப்பி கொடுக்க […]
