மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக பெண் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள விராலிகாட்டூர் காலனியில் தனசேகரன்-செலம்பாயி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினர் காய்கறி வியாபாரத்தை செய்து வருகின்றனர். இவர்களுக்கு கீதா மகள் இருந்தார். இவர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-1 பயின்று வந்தார். கடந்த 16-ம் தேதி கீதா வீட்டில் இருந்தபோது திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். […]
