நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த ஊரடங்கினால் தொற்று எண்ணிக்கை ஓரளவிற்கு குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கு தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டு கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மேற்கு வங்கத்தில் விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் ஜூலை 30 வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருமணத்தில் 50 பேரும், இறுதிச்சடங்கில் 20 பெரும் பங்கேற்கலாம் என்று தெரிவித்துள்ளார். […]
