தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையானது தீவிரமடைந்ததால் காய்கறி விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள வஉசி பூங்காவில் காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆந்திரா, பெங்களூர், ஒட்டன்சத்திரம், தாளவாடி, திண்டுக்கல், சத்தியமங்கலம் பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. ஆனால் பருவமழையின் காரணமாக விளைச்சல் குறைந்ததால் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி தக்காளி […]
