Categories
உலக செய்திகள்

2-வது மரண தண்டனை அறிவிப்பு…. ஹிஜாப் போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறையால் பரபரப்பு….!!!!

பயங்கரவாதத்தைத் தூண்டும் விதமாக ஆயுதங்களை பயன்படுத்தியதாகக் கூறி நேற்று  ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டின் தலைநகரான டெஹ்ரானில் கடந்த செப்டம்பர் மாதம் மாஷா அமினி என்ற பெண்  ஹிஜாப் சரியாக அணியாத காரணத்தினால் காவல்துறையினர் அவரை தாக்கியுள்ளனர். இதில்  அந்தப் பெண்  உயிரிழந்துள்ளார். இதனை கண்டித்து ஈரான் முழுவதும் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் ஹிஜாப் உடையைக் கிழித்தும் எரித்தும் வன்முறையில் ஈடுபட்டுள்ளார்கள். அப்போது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினரக்கும் இடையே  மோதல் ஏற்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

ஈரானில் பரபரப்பு…. இணையதளங்கள் முடக்கம்…. ஹிஜாப்பிற்கு எதிராக தீவிர போராட்டம்….!!!

ஈரானில் காவல்துறை காவலில்  இருந்த இளம்பெண் உயிரிழந்ததை தொடர்ந்து  ஹிஜாப் எதிர்ப்பு போராட்ட மோதலில் ஈடுபட்ட 31 பேர் உயிரிழந்துள்ளனர்.  ஈரான் நாட்டில் ஹிஜாப் அணியாததால் கைது செய்யப்பட்ட இளம்பெண், காவல்துறை காவலில் மர்மமான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து நடக்கும் போராட்டங்களில் ஏற்பட்ட மோதலில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கு பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை அமல்படுத்துவதற்காக, ‘ஹிஜாப் படை’ என்ற தனி காவல்துறை பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஹிஜாப்பை முறைப்படி அணியாத […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பற்றி எரியும் ஹிஜாப் விவகாரம்…. காவல் துறையினர் தாக்கியதில்…. 31 பேர் பலி….!!

ஈரானில் ஹிஜாப் கெடுபிடிக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் போது காவல்துறையினர் சுட்டதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. ஈரான் நாட்டில் சில நாட்களுக்கு முன்பு ஹிஜாப்பை சரியாக அணியவில்லை என்று கூறி மாசா என்ற 22 வயது இளம்பெண்ணை காவல்துறையினர் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். இது ஈரானிய பெண்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் பெண்கள் தாங்கள் அணிந்திருந்த ஹிஜாப்பை தீயிட்டு கொளுத்தியும், தங்கள் தலைமுடியை கத்தரித்தும் அரசிற்கு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

“ஹிஜாப் சரியாக அணியவில்லை”…. காவல்துறையினர் தாக்கியதில்…. 22 வயது இளம்பெண் பலி….!!

ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று 22 வயதான இளம்பெண்ணை காவல்துறையினர்  கடுமையாக தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் நாடு ஈரான். இந்நாட்டில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தலை மற்றும் முகத்தை மூடும் வகையிலான உடையான ஹிஜாப் அணிவது ஈரான் நாட்டில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கப்படுகின்றது. இதற்கிடையில் அந்நாட்டின் குர்திஸ்தான் மாகாணத்தை சேர்ந்த 22 வயதான மாஷா அமினி தனது […]

Categories
Uncategorized உலக செய்திகள்

ஐஸ்கிரீம் விளம்பரத்தால் சர்ச்சை…. விளம்பரத்தில் பெண்கள் நடிக்க தடை…. ஈரான் அரசின் அதிரடி நடவடிக்கை….!!

கடந்த 1979 ஆம் ஆண்டு  ஈரானில்  நடந்த   இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.  அதன் பின் ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய நாடு என்பதால் அதற்கு சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டுள்ளது.      இதில் ஒன்று அந்நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிவதாகும். சமீபமாக  சமூக வலைதளங்கள் மூலமாகவும் மற்றும் பொது இடங்களில் ஹிஜாபை அகற்றியும் சிலர் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் மீது ஈரான் அரசு கைது நடவடிக்கையை […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. இது எப்பதான் நிக்கபோகுதோ…. கொட்டித் தீர்க்கும் கனமழையால்…. பெரும் சேதம்….!!

ஈரானில் தொடர்ந்து பெய்யும் கனமழையால்  ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நில சரிவில் சிக்கி 69 பேர்  உயிரிழந்துள்ளனர். ஈரான் நாட்டில்  தெஹ்ரான் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதி உள்ளிட்ட 20 மாகாணங்களில் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இதனால் பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் மழை வெள்ளத்தினால் சூழ்ந்து பல இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இந்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 69 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 45 பேர் […]

Categories
உலக செய்திகள்

கொட்டி தீர்த்த கனமழை…. 24 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

தெஹ்ரான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.   ஈரான் நாட்டில் தெஹ்ரான் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியின் சுற்றுவட்டாரத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த கனமழையினால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஈரான் நாட்டில் சில நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என அந்நாட்டு […]

Categories
உலக செய்திகள்

என்ன நடக்குது இங்க…. நாடாளுமன்றத்தில் புகுந்த நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள்…. வெளிநாட்டில் அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம்….!!

ஈராக் நாட்டில் பிரதமராக முன்னிறுத்தப்பட்டவருக்கு எதிராக நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்திற்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.  ஈராக் நாட்டின் ஷியா தலைவர் முக்தாதா அல்-சதரின் ஆதரவாளர்களான நூற்றுக்கணக்கானோர் பாக்தாத்தில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டுள்ளனர். ஈரானிய ஆதரவு கட்சிகளால் முன்னிறுத்தப்பட்டுள்ள பிரதமர் வேட்பாளருக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.  இங்கு உச்ச பாதுகாப்பு வளையத்தில் அமைந்துள்ள நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சம்பவத்தின் போது உறுப்பினர்கள் எவரும் காணவில்லை என்று கூறப்படுகின்றது. அப்பொழுது பாதுகாப்புப்படையினர் மட்டுமே  காணப்பட்டுள்ளனர். அவர்களும் சம்பவத்தின் […]

Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்து 3 சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. 5 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

ஈரான் நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 5 பேர் பலியாகியுள்ளனர்.  ஈரான் நாட்டில் தெற்கே ஹார்முஜ்கன் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் இன்று அதிகாலை திடீரென  கூடுதலான சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து மூன்று முறை ஏற்பட்டுள்ளது. அதன்படி முதல் நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது தரைப்பகுதியில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து சில மணிநேரம் கழித்து  இரண்டாவது நிலநடுக்கமானது அளவுகோலில்  6.3 […]

Categories
உலக செய்திகள்

பெரும் சோகம்…. திடீரென தடம் புரண்ட ரயில்…. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

ஈரானில் ரெயில் தடம் புரண்டதில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.  ஈரான் நாட்டில் தெஹ்ரான் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியின் ரெயில்வே  நிலையத்தில் இருந்து தபாஸ் நகரத்தை நோக்கி பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அப்பொழுது தபாஸ் நகரத்தில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் மஷாத் மற்றும் யாஸ்த் நகரங்களுக்கு இடையில் சென்றுகண்டிருந்தபோது திடீரென ரெயில் தடம் புரண்டது. இந்த ரெயிலில் 348 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 10-க்கும் […]

Categories
உலக செய்திகள்

சீட்டுக்கட்டு போல் சரிந்த…. 10 அடுக்குமாடி கட்டிடம்…. பரபரப்பில் பிரபல நாடு….!!

ஈரானில் 10 அடுக்குமாடி வர்த்தக கட்டிடம் இடிந்து விழுந்ததில் 32  பேர் உயிரிழந்துள்ளனர்.  ஈரான் நாட்டின் தென்மேற்கில் குஜஸ்தான் மாகாணத்தில் அபடான் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் 10 அடுக்கு மாடி வர்த்தக கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மெட்ரோபோல் என பெயரிடப்பட்ட  கட்டிடத்தின் கட்டுமான பணிகளும் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தது. இந்த வர்த்தகத்தை சுற்றி மருத்துவ வளாகங்களும், அலுவலகங்களும் செயல்பட்டு கொண்டிருந்தது. அந்த சமயத்தில்  திடீரென கட்டிடம் சரிந்து இடிந்து  விழுந்தது. இந்த இடிபாடுகளில் […]

Categories
உலக செய்திகள்

பெரும் சோகம்…. சட்டென்று சரிந்த 10 மாடிக் கட்டிடம்…. 5 பேர் பலி…!!

10 அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.  ஈரான் நாட்டில் தெற்கு பகுதியில்  அபடான் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் அமீர் கபீர் தெருவில் அமைந்துள்ள 10 அடுக்குமாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து சரிந்து விழுந்தது.  இந்த விபத்தில்  பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்தவுடன் பிற நகரங்களில் இருந்தும் அவசரகால குழுக்கள்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனை அடுத்து 2 […]

Categories

Tech |