யேமன் கிளா்ச்சியாளா்களுக்கு ஈரான் ரகசியமாக அனுப்பிய ஏவுகணைகளை தங்களது நாட்டு கடற்படை இடை மறித்து பறிமுதல் செய்து இருப்பதாக பிரிட்டன் தெரிவித்து உள்ளது. இதன் வாயிலாக ஹூதி கிளா்ச்சியாளா்களுக்கு ஈரான் ஆயுதஉதவி அளிப்பதற்கான வலுவான ஆதாரம் தங்களுக்குக் கிடைத்து உள்ளதாக அந்நாடு தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பிரிட்டன் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓமன் வளைகுடா பகுதியில் ஈரானில் இருந்து அனுப்பட்ட தரையிலிருந்து வான் இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகள் மற்றும் என்ஜின்கள், […]
