ஈரானி கடற்படைக் கப்பல் பாரசீக வளைகுட கடலில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானி கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று ஓமான் வளைகுடாவில் அமைந்துள்ள ஈரானிய துறைமுகமான ஜாஸ்க் அருகே திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. அதில் பாதுகாப்பாக கப்பலில் இருந்தவர்கள் எல்லாரும் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளது. மேலும் பார்ஸ் செய்தி நிறுவனம் அந்த விபத்தில் ஏற்பட்ட தீயை முழுவீச்சில் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கடற்படை அறிக்கையை மேற்கோளிட்டு தகவல் வெளியிட்டுள்ளது. […]
