ஈராக் நாட்டின் அமெரிக்க தூதரக கட்டிடத்தின் மேலே வெடிகுண்டுகளுடன் பறந்துகொண்டிருந்த டிரோனை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் சென்ற ஆண்டு ஜனவரி மாதத்தில் அமெரிக்க ராணுவத்தினர் வான்வழி தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் அந்நாட்டின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அப்போது முதல் ஈரான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க படைகள் மற்றும் அமெரிக்க தூதரகத்தின் மீதும் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சமீபத்தில் […]
