அதிமுக பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு பிறப்பித்து இருந்தார். அந்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி துரைசாமி, சுந்தர் மோகன் இன்று தீர்ப்பளித்து இருந்தார்கள். இந்த தீர்ப்பினை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்ய இருக்கிறார்கள். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், நமக்குள் இருக்கின்ற பிரச்சனைகளை பேசுவதற்கு தான் நீதிமன்றம் சென்றிருக்கிறோம். நீதிமன்றத்தினுடைய கருத்தை விமர்சிக்க தயார் இல்லை. இன்றைய நிலையில் ஒருங்கிணைப்பாளராக அண்ணன் ஓபிஎஸ் இருந்து கொண்டிருக்கின்றார்கள். […]
