அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கில் பன்னீர் செல்வத்தின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுகவின் தலைமை அலுவலக சாவியை இடைக்கால பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களிடம் ஒப்படைத்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நிதி அரசர் சந்திர சூட் தலைமையிலான […]
