Categories
உலக செய்திகள்

20 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கனமழை…. 24 பேர் பலி… 12 பேர் மாயம்..!!

ஈக்வடார் தலைநகரில் 20 ஆண்டுகள்  இல்லாத அளவுக்கு பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 24 பேர் பலியான நிலையில்  12 பேர்  காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . ஈக்வடாரின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் தலைநகர் குயிட்டோவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 24 பேர் பலியானதாகவும் மற்றும் 12 பேரை காணவில்லை என்றும் அந்நாட்டின் மேயர்  சாண்டியாகோ கார்டெராஸ் கூறியுள்ளார். இந்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி […]

Categories
உலக செய்திகள்

“Omicron: எதிரொலி!”….. குழந்தைகளுக்கும் தடுப்பூசியை கட்டாயமாக்கிய நாடு….!!

ஈக்வடார் நாட்டில் ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக, குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஈக்வடார் அரசு, ஐந்து வயதுக்கு அதிகமான அனைத்து மக்களுக்கும் கொரோனாவிற்கு எதிரான  தடுப்பூசியை கட்டாயமாக்கியிருக்கிறது. எனினும், மருத்துவ ரீதியிலான காரணங்கள் உள்ளவர்கள் மட்டும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை கூறியிருக்கிறது. அந்நாட்டில் ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே, வணிக வளாகங்கள், திரையரங்குகள் மற்றும் உணவகங்கள் போன்ற பொது இடங்களுக்கு செல்வதற்கு மக்கள், கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories
உலக செய்திகள்

“சிறையில் கும்பல்களுக்கு இடையே நடந்த மோதல்!”.. பயங்கர கலவரத்தில் 68 கைதிகள் படுகொலை..!!

ஈக்வடார் என்ற தென் அமெரிக்க நாட்டின் ஒரு சிறையில் வன்முறை ஏற்பட்டு 68 கைதிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் கொடூரமாக நடந்த இந்த கலவரமானது, இரண்டு கும்பல்களுக்கு நடுவில் நடந்த போட்டியால் ஏற்பட்டிருக்கிறது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அதாவது, Guayaquil என்ற  நகரின் அருகில் இருக்கும் லிட்டோரல் சிறையில் நேற்று முன்தினம் இரவில் கைதிகளுக்கிடையே வன்முறை ஏற்பட்டிருக்கிறது. இந்த சிறையில் Los Choneros என்னும் கும்பலைச் சேர்ந்தவர்கள் தான் அதிகமாக கைதிகளாக இருக்கிறார்கள். சுமார் […]

Categories
உலக செய்திகள்

“அமேசான் காடுகளிலிருந்து எடுக்காதீங்க” எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும்…. கோரிக்கை விடுத்த பூர்வகுடியினர்….!!

அமேசான் காடுகளில் இருந்து கச்சா எண்ணெய் எடுக்கும் திட்டத்தை அரசு கைவிடக்கோரி பூர்வகுடியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈக்வடார் நாட்டிலுள்ள அமேசான் காட்டு பகுதிகளிலிருந்து கச்சா எண்ணெய் எடுக்கும் அரசின் திட்டத்தினை எதிர்த்து பூர்வகுடியினர் வழக்கு தொடுத்துள்ளனர். கடந்த மே மாதம் அதிபராக பதவியேற்ற குவிலெர்மோ லாசோ அந்நிய முதலீடுகள் மூலம் நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கும் என அரசாணை பிறப்பித்தார். இந்த திட்டத்தினை அமேசான் காடுகளில் அனுமதித்தால் அங்கு வந்து 22 பூர்வகுடியினரின் வாழ்வாதாரமானது பாதிக்கப்படும். […]

Categories
உலக செய்திகள்

தலைவரின் உடலை திருப்பி கொடுங்க… ராணுவ வீரர்கள் உட்பட 6 பேரை கடத்தி சென்று மிரட்டிய பழங்குடியினர்..!!

ஈக்வடார் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்த தங்கள் தலைவரின் உடலை திரும்பித்தரக் கோரி ராணுவ வீரர்கள் உட்பட 6 பேரை அமேசான் பழங்குடியின மக்கள் கடத்திச்சென்ற பின், புதைத்த உடல் தோண்டி எடுக்கப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று ஈக்வடார் (Ecuador). இந்த நாடு, பெரு, பிரேசில் நாடுகள் அருகில் அமைந்துள்ளது. உலகிலேயே மிகப்பெரிய மழைக்காடுகளான அமேசான் இந்தநாட்டை சுற்றி தான் அமைந்துள்ளது. இந்த காடுகளின் பகுதிகளில் பல்வேறு கலாச்சாரத்தை கொண்ட அமேசான் பழங்குடியின மக்கள் […]

Categories

Tech |