இ-ஷ்ரம் இணையதளத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களில் பெண்களே அதிக அளவு பதிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டிலுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களின் விவரங்கள் அடங்கிய புதிய போர்ட்டல் ஒன்றை மத்திய அரசு அறிமுகம் செய்தது. அதில் பல துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை, அவர்களின் சமூக நலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கணக்கெடுப்புகள் இடம்பெற்றிருந்தது. மேலும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்களை அவர்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் வகையில் மத்திய அரசு இந்த […]
