அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் இருப்பதாகக் கூறி முன்பணம் கேட்டுவரும் இமெயில்கள் போலியானது. அதை யாரும் நம்ப வேண்டாம் என அந்த பல்கலைக்கழகம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ‘முதல் செமஸ்டர் கட்டணத்துடன் ரூ.1 லட்சம் கட்டினால் இலவசமாக படிக்கலாம் என்று பல மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் இமெயில் அனுப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது. அந்த இ- மெயில்கள் போலியானது. இந்த இமெயில்கள் குறிப்பாக என்.ஆர்.ஐ மாணவர்களை குறிவைத்து அனுப்படுகிறது. மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல்களுக்கு […]
