லஞ்சம் பெற்று இ-பாஸ் வழங்கும் அதிகாரிகள் மீது இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய தனியார் நூற்பாலையில் சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்டுள்ள திருவண்ணாமலையைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அதே பகுதியை சேர்ந்த சிவ பாபு என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி […]
