வருமானவரி பிரிவால் வழங்கப்படும் மிக முக்கிய ஆவணங்களில் ஒன்று பான் கார்டு எனப்படும் நிரந்தர கணக்குஎண். இந்த கார்டிலுள்ள 10 இலக்க எண்களில் உங்களது வரி குறித்த அனைத்து விதமான முக்கிய தகவலும் சேமிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பான்கார்டு முக்கியமான ஒன்றாக இருக்கிறது. தற்போது வருமான வரித் துறை உங்களுக்கு ஒரு சலுகையை வழங்கி இருக்கிறது. அதாவது இதை அட்டை ஆக கையில் வைத்துக் கொள்ளாமல், இ-பான்கார்டு பிடிஎப்-ஐ டவுன்லோடு செய்து உங்களது மொபைலில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். […]
