தமிழகத்தில் பள்ளிக்கல்வியில் பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை பெறுவதற்கு இ சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கும் திட்டத்தை பள்ளி கல்வித்துறை தற்போது அறிமுகம் செய்துள்ளது.இ சேவை மையங்களில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பள்ளி கல்வி மாநில திட்டத்திலிருந்து மின்னஞ்சல் மூலமாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்படும். அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் இணையதள செயலியின் மூலமாக பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடமிருந்து சான்றிதழ் கோரி பெறப்படும் விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர்களுக்கு […]
