இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இஸ்ரோ ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் அமைந்துள்ளது. இந்த விண்வெளி மையத்தில் இருந்து நேற்று முன் தினம் நள்ளிரவு 36 செயற்கைக்கோள்களுடன் ஜிஎஸ்எல்வி மார்க 3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இதனையடுத்து இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தற்போது ஜிஎஸ்எல்வி 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டை விண்ணில் ஏவி நாங்கள் இப்போதே தீபாவளி பண்டிகையை தொடங்கி விட்டோம். […]
