Categories
உலக செய்திகள்

காசா மீது…. இஸ்ரேல் ராணுவம்…. வான் வழித்தாக்குதல்….!!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல்  நிலவி வருகின்றது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியிலிருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம் நேற்று வெளியிட்டுள்ள தகவலின்படி, காசா முனையின் மத்திய பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வான்வழித்தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேலில் உள்ள ராணுவ படைத்தளங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

60 வயசுக்கு மேல தான் உண்டு…. ஆலோசனை நடத்தும் ஆராய்ச்சியாளர்…. முடிவு எடுத்த பிரபல நாடு…!!

3வது தவணை தடுப்பூசியை 60 வயது மேலுள்ளவர்களுக்கு செலுத்த போவதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. உலக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸ்க்கு  எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வைரஸ் கிருமியானது தொடர்ந்து உருமாற்றம் அடைந்து கொண்டே வருவதால் இரண்டு தவணைகளுக்கு மேலாக  மூன்றாவதாக பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்துவது குறித்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இஸ்ரேல் […]

Categories
உலக செய்திகள்

புதிய ஆட்சியின் முதல் தாக்குதல்…. பதிலடி கொடுத்த இஸ்ரேல் ராணுவம்….!!

இஸ்ரேலின் தெற்கு பகுதியில் தீப்பிடிக்கும் பலூன்களை பறக்கவிட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காசாவில் பல பகுதிகளில் அந்நாட்டு ராணுவம் வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளது. இஸ்ரேலிய ராணுவ படைகள் காசாவின் பல இடங்களில் குண்டு வெடிப்பு சத்தம் கேட்கும்படியான வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்நிலையில் பாலஸ்தீனிய பயிற்சி முகாமிற்கு குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக, ஹமாஸ் போராளிக் குழுவினர்கள் இயக்கிவரும் வானொலி நிலையம் ஒன்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து தெற்கு இஸ்ரேலில் தீப்பிடிக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்ட பலூன்களை […]

Categories
உலக செய்திகள்

ஹமாஸ் பயங்கரவாதிகளின் அட்டூழியம்… வான் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம்…!!!

பாலஸ்தீனத்தில் ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் வான் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையில் எல்லைப் பிரச்சனை காரணமாக நீண்ட காலமாக மோதல் நடந்து கொண்டிருக்கிறது. பாலஸ்தீனத்தில் சர்ச்சைக்குரிய காசா பகுதியில் ஹமாஸ் பயங்கரவாத இயக்கம் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. அந்த இயக்கம் இஸ்ரேல் ராணுவத்தினர் மீது தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றது. அந்த இயக்கத்தின் பயங்கரவாதிகளை அழிக்க இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு […]

Categories

Tech |