இஸ்ரேல் பாலஸ்தீனிய மோதலில் பாலஸ்தீனிய சிறுவன் கையெறி குண்டு வெடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் கடந்த பல வருடங்களாக மோதல் நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனத்தின் காசாமுனை பகுதியை ஹமாஸ் அமைப்பும், மேற்கு கரை பகுதியை பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸும் நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கு கரை மற்றும் காசா முனை பகுதியில் இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதும் ஹமாஸ் போன்று பல ஆயுதமேந்திய குழுக்களும் செயல்பட்டு வருகிறது. அதே சமயம் மேற்கு […]
