கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய 15,500 பெண்களுக்கு ரூ.922 கோடியை இழப்பீடாக வழங்க அந்நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. பாலின பாகுபாட்டை கடைபிடித்தாகக் கூறி கூகுள் நிறுவனம் 11 கோடியே 8 லட்சம் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பின் படி (சுமார் ரூ.922 கோடி) இழப்பீடு செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா நாட்டில் கலிபோர்னியா மாகாணத்தில் செயல்பட்டு வரும் கூகுள் தளத்தில், பணியாற்றிய அனுபவம் வாய்ந்த பெண்களைக் காட்டிலும் அந்நிறுவனத்தில் ஆண்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக புகார் […]
