இளையராஜா இந்திய சினிமாவின் இசை முகவரி. தமிழ்திரை இசைக்கு வெள்ளித்திரையில் கம்பீரம் கூட்டிய இசை சாம்ராஜ்யம். ஸ்வரங்களாலும் மெட்டுகளாலும் இளையராஜா கட்டமைத்த இசை என்னும் பெரும் கோட்டை உலக மக்களின் கடவுள் தேசமாகவே வரலாறு கடந்து கம்பீரமாக காட்சி அளிக்கிறது. அன்னக்கிளியில் தொடங்கிய ராஜாவின் ராஜாங்கம் மெல்லிய காற்றாய் தமிழர்களின் இதயங்களை நீவியிருக்கிறது. பெரும் கோபமாய் ருத்ரதாண்டவம் நிகழ்த்தியிருக்கிறது. சாரம் மழையாய் வயல்வெளிகளிலும் பளிச்சென்று இருக்கிறது. மொத்தத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்களின் வாழ்வில் ஊறிப்போய் […]
