ராமநாதபுரம் ஆர்.எஸ். மங்கலம் அருகில் கோட்டைக்காடு பகுதியில் வசித்து வந்தவர் காந்தியின் மகன் ராம்குமார் (35). இவரது மனைவி கார்த்திகா ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். தற்போது ராம்குமார் மனைவியின் ஊரான ஆவரேந்தல் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு ஆவரேந்தல் கிராமத்திலிருந்து காய்கறிகள் வாங்குவதற்காக ராம்குமார் ஆர்.எஸ். மங்கலம் சந்தைக்கு தன் இருசக்கர வாகனத்தில் வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கீழக்கோட்டை மிளகாய் கிடங்கு அருகே அவர் வந்தபோது சாலையின் குறுக்கே […]
