இரும்பு கம்பிகளை ஏற்றி சென்ற லாரி மீது கார் மோதியதில் இளைஞர் உயிரிழந்த நிலையில் மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் பகுதியில் நிஜாமுதீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நிஜாமுதீன் மற்றும் பெரிய பட்டிணத்தை சேர்ந்த பகத்ராஜா ஆகிய இருவரும் பரமக்குடிக்கு காரில் சென்று கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் பரமக்குடி பொதுவக்குடிநான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்த போது காருக்கு முன்பு ஆந்திராவில் இருந்து இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஓன்று சென்றுள்ளது. […]
