அர்ஜெண்டினா ரயில்வே பாதையில் இளைஞர்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்த அதிர்ச்சியளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அர்ஜெண்டினாவை சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து மது அருந்துவதற்காக கடைக்கு சென்று உள்ளனர். அப்போது மதுபான கடையில் வைத்து இளைஞர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 20 இளைஞர்கள் மதுபான கடையில் இருந்து சண்டை போட்டுக்கொண்டே அருகில் உள்ள ரயில் பாதைக்கு வந்துள்ளனர். அங்கு ரயில் வரும் என்று துளி கூட பயம் இல்லாமல் அந்த இளைஞர்கள் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். […]
