பன்னிரண்டாம் வகுப்பு கணித பாடத்திற்கான வினாத்தாள்கள் கசிவுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் 12 ஆம் வகுப்புக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வில் கணித பாடத்திற்கான வினாத்தாள் வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற முதல் திருப்புதல் தேர்வில் அனைத்து பாடங்களுக்கான வினாத்தாள்களும் முன்கூட்டியே வெளியாகியிருந்தன. அதற்காக […]
