இருசக்கர வாகனம் மீது லாரி மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் இளைஞர் சம்பவ இடத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆதிபட்டியில் உள்ள சாஸ்தா கோவில் தெருவில் அருண்பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகள் முன்பு ஜெயப்பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அருண்பாண்டியன் போடியில் உள்ள செல்போன் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து அருண்பாண்டியன் மற்றும் அவரது மனைவி ஜெயப்பிரியா இருவரும் ஆதிபட்டியில் இருந்து […]
